ரஷ்ய தாக்குதலில் உலகின் மிகப்பெரிய விமானம் அழிப்பு!

உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 என்ற விமானம், யுக்ரேனில் தயாரிக்கப்பட்டது.

யுக்ரேனின் ஹொஸ்டமெல் விமான நிலையத்திலேயே இந்த விமானம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த விமானம் இறுதியாக ஹொஸ்டமெல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமைக்கான தரவுகள் காணப்படுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *