இடையூறு செய்யும் நாடுகளுக்கு எதிராக அணுவாயுத தாக்குதல் நடத்தப்படும்!

உலக நாடுகளின் கடும் அழுத்தங்களையும் மீறி உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தம் நான்காவது நாளாகவும் தீவிரமடைந்துள்ளது.

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முனைப்புடன் தீவிரமாக முன்னேறிய வரும் ரஷ்ய படைகளுக்கு பதில் தாக்குதலை உக்ரைன் படைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பல ஐரோப்பிய நாடுகள் இராணுவ உதவி வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளன.

இன்றையதினம் சில நாடுகளின் ஆயுத தளபாடங்கள் உக்ரைன் எல்லையை தாண்டியுள்ளன. இந்நிலையில் தமது இராணுவ நடவடிக்கைக்கு எந்தவொரு நாடும் இடையூறு செய்தால் அணுவாயு தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மீது அணு ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக அணுவாயுத செயற்பாட்டுக்கு பொறுப்பான தரப்பினரை தயார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். நிலைமை எல்லைமீறிச் சென்றால் அணுவாயுத தாக்குதல் தீவிரமடையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், உலக நாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அணு ஆயுதம் குறித்து எச்சரிக்கை ரஷ்ய ஜனாதிபதி விடுத்திருந்தார்.

உலகின் மிக வலிமையான அணு ஆயுதங்கள் உள்ள நாடாக, ரஷ்யா விளங்குகிறது. அதுமட்டுமின்றி, ஏராளமான அதிநவீன போர் ஆயுதங்களும் ரஷ்யாவிடம் உள்ளதென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இதனால் ரஷ்யாவை யார் தாக்கினாலும், அவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் உலக தலைவர் ஒருவர், தன்னிடம் அணு ஆயுதங்கள் உள்ளதை பகிரங்கமாக தெரிவித்து எச்சரித்துள்ளார்.

இது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக படைகளை அனுப்பும் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *