நேரடி ஒளிபரப்பில் பத்திரிகையாளரின் தலைக்கு மேல் பறந்து சென்ற ஏவுகணை!

அவுஸ்திரேலிய  பத்திரிகையாளர் உக்ரைனின் கீவ் பகுதியில் இருந்து தனது நேரடி ஒளிபரப்பை பகிர்ந்து கொள்ளும் போது ஒரு சூப்பர்சோனிக் ஏவுகணை அவரது தலைக்கு மேல் பறந்து சென்றது.

அவுஸ்திரேலிய பத்திரிகையாளரான பிரையன் வில்சன் உக்ரைனின் கீவ் பகுதியில் இருந்து உக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்து தனது நேரடி ஒளிபரப்பை டுவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் போது ஒரு ஏவுகணை அவரது தலைக்கு மேல் பறந்து சென்றது.

வில்சன் உக்ரைனின் தலைநகரில் காணப்படும குழப்பநிலையை பதிவுசெய்ய ஆரம்பித்தவேளைஅவரின் தலைக்கு மேலாக ஏவுகணையையொன்று சென்றுள்ளது.
அது ஏவுகணை அது ஏவுகணை என அவர் சத்தமிடுகின்றார்.

நாங்கள் உள்ளே போகவேண்டும் அது ஏவுகணை என்னால் அதனை படம்பிடிக்க முடியாது எனஅவர் சத்தமிடுகின்றார்.
அவரின் தலைக்கு மேலாக ஏவுகணை தொலைவில் உள்ள கட்டிடத்தை நோக்கி செல்வதை காணமுடிகின்றது.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் அவுஸ்திரேலிய ஊடகவியலாளரையும் அவரது குழுவினரையும் பாதுகாப்பாகயிருக்குமாறு வேண்;டுகோள்களை பதிவுசெய்து வருகின்றனர்.

மிகவும்பயங்கரமான அனுபவமாக இருக்கவேண்டும் அவரும் அவரது குழுவினரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என பிரார்த்தனை செய்கின்றேன் என பெண்ணொருவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பகுதியில் தொடர்ந்தும் எறிகணை தாக்குதல்கள் இடம்பெறுகின்றன-நான் என்னையும் எனது சகாக்களையும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்கின்றேன் நிலைமை மாற்றமடைந்துகொண்டிருக்கின்றது ஆபத்தானதாக காணப்படுகின்றது ஆனால் மக்கள் யுத்தம் இடம்பெறாதது போல செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்-இங்கு நடப்பதை என்னால் நம்பமுடியவில்லை என வில்சன் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *