தப்தர் ஜெய்லானியின் நுழைவாயில் மினாராக்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது!

வர­லாற்றுப் புகழ்­மிக்க கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் வளா­கத்தில் அமை­யப்­பெற்­றி­ருந்த நுழை­வாயில் மினாராக்­களை தாங்­கி­யி­ருந்த கட்­ட­மைப்பு நேற்­று­முன்­தினம் இரவு இனந்­தெ­ரி­யா­தோரால் பெக்கோ இயந்­திரம் மூலம் அகற்­றப்­பட்­டுள்­ளது.

இதற்கு பிர­தே­ச­வா­சிகள் பள்­ளி­வாசல் நிர்­வாகம் உட்­பட முஸ்லிம் அமைப்­புகள் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன.

மினாரா அகற்­றப்­பட்­டுள்­ள­மையை பள்­ளி­வா­ச­லுக்குப் பொறுப்­பா­ன­வர்கள் நேற்றுக் காலையே அறிந்­து­கொண்­டுள்­ளனர்.

உட­ன­டி­யாக இது தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து பள்­ளி­வாசல் நிர்­வாகம் நேற்று சூம் இணை­ய­வ­ழி­யூ­டாக கூட்­ட­மொன்­றினை நடாத்தி நிலை­மை தொடர்பில் ஆராய்ந்­தது.

இந்த நிகழ்வு தொடர்பில் ‘’ கூர­கல புனித பூமிக்கு பொறுப்­பாக செயற்­படும் நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரரை தொடர்பு கொண்டு வின­விய போது அவர் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளதை உறுதி செய்­த­தோடு மேல­திக தக­வல்­களைத் தெரி­விக்க மறுத்­து­விட்டார்.

ஜெய்­லானி பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் செய­லாளர் அம்ஜாட் மௌலா­னாவைத் தொடர்பு கொண்­ட­போது அவர் இவ்­வாறு கூறினார். ‘ஜெய்­லானி பள்­ளி­வாசல் தொல்­பொருள் பிர­தே­சத்­திலே அமைந்­துள்­ளது. நாட்டில் ஒரே சட்­டமே இருக்க வேண்டும். இது தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட அரச நிறு­வ­னங்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடாத்திக் கொண்­டி­ருக்­கிறோம். சட்ட ரீதி­யான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது தொடர்பில் கலந்­து­ரை­யாடி வரு­கிறோம்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் வக்பு சபை ஊடாக உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். பிரச்­சி­னை­களை சுமு­க­மாக தீர்த்துக் கொள்­வதில் கவனம் செலுத்தி வரு­கிறோம் என்றார்.

ஜெய்­லானி பள்­ளி­வாசல் பௌத்­தர்­களின் புனித பூமி­யிலே அமைந்­துள்­ளது. இப்­பள்­ளி­வாசல் அகற்­றப்­பட வேண்டும். பதிலாக முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு வழிபாட்டுத்தலம் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-

நன்றி Vidivelli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *