டீசல் தட்டுப்பாடு 300 நீண்ட தூர பேருந்துகள் நிறுத்தம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான சுமார் 300 தனியார் பேருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மாகாணங்களுக்கி டையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படும் மாகாணங்களுக்கிடை யிலான தனியார் பேருந்துகள் சுமார் 3,200 உள்ளதாகவும், அவற்றில் சுமார் 2,000 பேருந்துகள் தற்போது இயங்கி வருவதாகவும் அதன் தலைவர் சரத் விஜித குமார சுட்டிக்காட்டியுள்ளார்.

2,000 பேருந்துகளில் 300 இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலை தொடருமானால் பேருந்துகளை இயக்க முடியாமல் பயணிகள் கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங் களில் வழமையான டீசல் இல்லை எனவும் சுப்பர் டீசலை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *