இலங்கையில் 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி!

நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் நோய் நிலைமை மோசமடைந்து சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் பிள்ளைகளுக்கு கொவிட் தொற்றுடன் தொடர்புபட்ட ‘மிஸ் சி’ Multisystem Inflammatory Syndrome in Children (MIS-C) நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இது பிற்காலத்தில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *