பிரேத பரிசோதனைக்கு PCR கட்டாயம் அல்ல; சுற்றறிக்கை வெளியீடு!

மரணங்களின் போதான பிரேத பரிசோதனைக்கு PCR கட்டாயம் இல்லை என தெரிவித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால்  சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மருத்துவமனையில் அல்லது மருத்துவமனையில் அல்லாத அனைத்து மரணங்களுக்கும் பிரேத பரிசோதனைக்கு PCR கட்டாயமில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும், அவசியம் ஏற்படின் சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) விருப்பத்தின் பேரில் PCR சோதனை மேற்கொள்ளலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அதில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மரணம் கொவிட்-19 தொடர்பானது என கண்டறியப்பட்டால், ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமைய சடலத்தை அகற்றும் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும், அது மறுஅறிவிப்பு வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர், அசேல குணவர்தன அதில் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *