புதிய Astra Acti√ பிள்ளைகளின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது!

அஸ்ட்ரா 1965ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இலங்கையின் சிறுவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வளரத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் சிறந்த சுவையையும் வழங்கியது. அஸ்ட்ரா தற்போது Upfield க்கு சொந்தமான நிறுவனமாகும். உலகின் மிகப்பெரிய தாவர – அடிப்படையிலான உற்பத்தியை மேற்கொள்ளும் இந்நிறுவனம், 95க்கும் அதிகமான நாடுகளில் இயங்கி வருகிறது. இலங்கையின் குடும்பங்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றிடும் நோக்கத்துடன் செயற்படும் ஓர் அமைப்பாக, எமக்கும் இவ்வுலகத்தும் நல்லதைத் தரும் தாவர – அடிப்படையிலான தயாரிப்புக்கள் மூலம் Upfield எப்போதும் நுகர்வோருக்கான தேவைகளுக்கும் அவர்களது மன அழுத்தங்களுக்கும் தீர்வுகளுடன் வருவதை உறுதி செய்கிறது.

Astra Fat Spread, Astra Mayonnaise மற்றும் Astra Cooking Pack ஆகியவை அதன் உற்பத்தி வரிசையில் இடம் பிடிக்கின்றன. சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனமாக Upfield Sri Lanka ஆனது புதிய fat spread ஆன  Astra Acti√ இனை அறிமுகப்படுத்தியுள்ளது. Astra Acti√ ஆனது A, D, B6, B9 மற்றும் B12ஆகிய நுண்ணூட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டுள்ளதுடன், நோயெதிர்ப்புச் சக்தியின் இயல்பான செயற்பாட்டையும் ஆதரிக்கும். மேலும் சிறுவர்களின் உடல் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தேவையான ஒமேகா 3 மற்றும் 6 ஆகியவற்றையும் உள்ளடங்கியுள்ளது. இவை இயற்கையாகவே சூரியகாந்தி மற்றும் கனோலாவிலிருந்து பெறப்படுகின்றன.

தாவர – அடிப்படையிலான ஓர் தயாரிப்பான Astra Acti√ ஆனது bad trans fats எனும் கெட்ட கொழுப்புகளிலிருந்து விடுபடுகிறது. அத்தோடு செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டிகள் உள்ளடக்கப்படாதது. மேலும் இதில் உள்ளார்ந்த கொலஸ்ட்ரோல் எதுவும் இல்லை. மிகமுக்கியமாக இது ஒரு மென்மையான fat spread ஆக விளங்குகிறது. அதனால் இன்றைய பிஸியான வாழ்க்கைக்கு உகந்ததாக இந்த Astra Acti√ பொருந்துகிறது. நீங்கள் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து வெளியே எடுத்த உடனேயே இதைப் பயன்படுத்தலாம். எனவே தாய்மாருக்கு வேலைப்பளு நிறைந்த காலை வேளையை சிறப்பாக நிர்வகித்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப உதவுகிறது.

இலங்கையின் சிறுவர்களுக்கு உகந்த தெரிவாக அதன் நற்சான்றிதழ்களை உறுதிப்படுத்திடும் வகையில் Upfield Sri Lanka வினால் Astra Acti√  இன் அறிமுக நிகழ்வு பெப்ரவரி 1ஆம் திகதி இடம்பெற்றது. டாக்டர் ஆர்.எம். சுரந்த பெரேரா – குழந்தை மருத்துவ ஆலோசகர் மற்றும் நியோநேட்டோலிஜிஸ்ட், இலங்கை சுகாதார அமைச்சு உட்பட திருமதி. நிலேஷா தஹநாயக – பதிவுசெய்யப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர், Dietplan LK இன் ஊட்டச்சத்து நிபுணர், தேசிய கால் பந்தாட்ட அணியின் முன்னாள் ஊட்டச்சத்து நிபுணர், நடினி பிரேமதாச – இசைக்கலைஞர், தாய் மற்றும் ஷெஹானி லியனகே – உலகளாவிய சந்தைப்படுத்தல் முகாமையாளர் – Upfield Lanka Limited இன் BlueBand – AMEA (ஆசியா மத்திய கிழக்கு ஆபிரிக்கா) மற்றும் ANZ பிராந்தியம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்குழுக் கலந்துரையாடல், நோயெதிர்ப்புச் சக்தியின் இயல்பான செயற்பாட்டை ஆதரிக்கும் முக்கியமான விட்டமின்களான A, D, B6, B9 மற்றும் B12 உள்ளிட்ட சரியான நுண்ணூட்டச்சத்துக்கள் பற்றிய தொழில்முறை கருத்துக்கள் மற்றும் நுண்ணறிவுகளை வழங்கியது. இந்த அமர்வு பெற்றோர் மற்றும் ஊடகங்களை உள்ளடக்கிய பார்வையாளர்களுக்கு அவர்களது குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தியை ஆதரிக்க தேவையான சரியான ஊட்டச்சத்து, அதன் அளவு மற்றும் அதற்காக உட்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றிய நுண்ணறிவினை வழங்கியது. மரக்கறிகள், பழங்கள், பச்சை இலை வகைகள் போன்றவற்றிலுள்ள ஊட்டசத்து தொடர்பாகவும் அவற்றை பிள்ளைகளுக்கு வழங்குவதில் உள்ள சிரமங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் இக்கலந்துரையாடலில் பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பெற்றோர் பிள்ளைகளின் உடல், உள மற்றும் அறிவு சார்ந்த வளர்ச்சியை எதிர்ப்பார்க்கின்றனர். அதற்கான சரியான ஊட்டச்சத்து பிள்ளைகளுக்கும் தேவைப்படுகிறது.

மேலும் உடல் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தேவையான கொழுப்பு அமிலங்கள் ஒமேகா 3 மற்றும் 6 ஆகியவற்றில் உள்ளடங்கியுள்ளது. எவ்வாறாயினும் இக்கொழுப்பு அமிலங்கள் உடலில் தானாக உற்பத்தி செய்யப்படாதவை என்பதால் இவற்றை உணவின் மூலம் உட்கொள்தல் அவசியமாகிறது. ஒமேகா 3 மீன் எண்ணையிலும், ஒமேகா 6 சூரியகாந்தி, கனோலா, ஆளி விதை மற்றும் அதே போன்ற தாவர வித்துக்கள் மற்றும் எண்ணையில் அதிகமாக காணக்கூடியதாக இருக்கிறது. பிள்ளைகளின் உணவுத் தெரிவுகளுடன் இவை சரியான அளவுகளில் நாளாந்தம் பிள்ளைகளுக்கு சென்றடையச் செய்வது சவாலான விடயமாகும். அதனாலேயே பல அத்தியவசிய கொழுப்புக்களையும் நுண்ணூட்டச்சத்துக்களையும் கொண்டுள்ள சுவையான fat spread ஆன Astra Acti√ பெற்றோருக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக இருக்கப்போகிறது.

மேலும் இக்குழுக் கலந்துரையாடல் கொழுப்பு மற்றும் மார்கரின் பற்றிய கட்டுக்கதைகளை தெளிவுபடுத்தும் அதே வேளை நம்பகமான தகவல்களை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இங்கு Prosoft research agency இனால் மதிப்பாய்வு செய்யப்பட்டு பெறப்பட்ட தகவல்களும் பகிரப்பட்டன. இதன் மூலம் பெறப்பட்ட நுகர்வோர் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் ஆச்சரியமூட்டுவதாக அமைந்திருந்தன. 95% ஆனோர் கொழுப்பு வகைகள் முற்றிலும் கெடுதல் விளைவிப்பவை, அவை உங்கள் உடலை பருமனாக்கும் என்பது போன்ற முற்றிலும் தவறான கருத்துக்களை முன்வைத்திருந்தனர். உங்கள் நாளாந்த சக்தியில் 30% ஆனது கொழுப்பில் இருந்து வரவேண்டியவை என WHO தெரிவித்துள்ளது.

எந்தவொரு உணவு வகையையும் மிதமான அளவில் உட்கொள்ளுதல் வேண்டும் என்பதே முக்கியமான விடயமாகும். ஆனாலும் மிக முக்கியமான நுண்ணூட்டச் சத்துக்கள் என்ற வகையில் உடம்பிலுள்ள கொழுப்புக்களை நீங்கள் முற்றாக நீக்குமிடத்து தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்குள் உறிஞ்சாமை, கெட்ட கொழுப்பின் உருவாக்கம் போன்ற பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

தலைமுறை தலைமுறையாக 56 வருட காலமாக தாய்மாரின் நன்மதிப்பைப் பெற்ற Astra தமது தனித்துவமான சுவைக்கு பெயர் பெற்றது. மேலும் Astra Acti√க்காக அதன் சிறந்த சுவை இன்னும் பராமரிக்கப்படுகிறது. நுகர்வோர் தாங்கள் வாங்கும் தயாரிப்புக்களின் ஆதாரங்களைப் பற்றி தொடர்ந்தும் கவலைப்படும் சூழலில் Upfield தயாரிப்புக்கள் உலகளாவிய மற்றும் உள்நாட்டு தரங்களுக்கு ஏற்றவாறு சிறந்த பொருட்களுடன் தயாரிக்கப்படுகின்றன என்ற தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் இவர்களது தயாரிப்புக்கள் SLSI தரநிர்ணயங்களின் வழிகாட்டுதலின் HACCP மற்றும் GMP சான்றளிக்கப்பட்ட வசதியின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தங்கள் தயாரிப்புக்களை உருவாக்கும் செயற்பாட்டில் trans fats உருவாகாமல் இருப்பதை உறுதி செய்ய மேலும் ஹைட்ரஜனேற்றம் மற்றும் உயர் தொழில்நுட்பங்களைக் கொண்டு மாகரின் தயாரிக்கப்படுகின்றன.

Astra ஆனது உலகளாவிய வர்த்தகநாமமான BlueBand இன் ஒரு பகுதியாகும். இது பாகிஸ்தான், நெதர்லாந்து, கென்யா, மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உட்பட 35 நாடுகளில் காணப்படுகின்றது. அதனால் எங்கள் குடும்பங்களுக்கு அவர்களது வழமையான உணவில் தேவையான அத்தியவசிய கொழுப்புக்கள் மற்றும் விட்டமின்களை உள்ளடக்கும் விதத்தில் அதே செயலாக்க நுட்பங்கள் மூலம் அதே உலகளாவிய தரத்தில் எங்கள் வீடுகளுக்கு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *