தெரு ஓரங்களில் இரத்த ஆறு ஓடும் இராணுவ தளபதி எச்சரிக்கை!

ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன் மீதான படையெடுப்புக்கு உத்தரவிடுவாரானால், உக்ரைன் தெருக்களில் ரஷ்யர்களின் ரத்த ஆறு ஓடும் என உக்ரைன் தளபதிகளில் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய- உக்ரைன் விவகாரம் இறுகி வரும் நிலையில், உக்ரைன் ராணுவத்தினர் தங்கள் தயாரெடுப்புகளின் அடுத்தகட்டத்தை எட்டியதை அடுத்து உக்ரைன் இராணுவ தளபதிகளில் ஒருவரான Oleksandr Syrskyi கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உளவுத்துறையின் தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 16ம் திகதி பெரும்பாலும் ரஷ்யா இறுதி முடிவை எடுக்கும் எனவும், அன்றே உக்ரைனுக்குள் ரஷ்யா நுழையும் எனவும் செய்தி ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்க உளவு அமைப்புகள் வெளியிட்டுள்ள தரவுகளில் உக்ரைனின் குறிப்பிட்ட பகுதியூடாகவே ரஷ்யா தாக்குதலை முன்னெடுக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, நாட்டின் தென் பகுதியில் உக்ரைன் ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அமெரிக்க, பிரித்தானிய நாடுகளின் புதிய ஆயுதங்களை பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தளபதி Oleksandr Syrskyi தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தரப்பில் இராணுவத்தினர் தயார் நிலையிலேயே உள்ளனர் என குறிப்பிட்டுள்ள Oleksandr Syrskyi, எங்கள் சடலங்கள் மீது தான் ரஷ்ய ஜனாதிபதி உக்ரைனுக்குள் நுழைய முடியும் எனவும், ஒரு மீற்றர் நிலப்பரப்பையும் ரத்தம் சிந்தாமல் அவர்களால் மீட்க முடியாது எனவும் தளபதி Oleksandr Syrskyi ஆவேசமுடன் தெரிவித்துள்ளார்.

ஒரு பூங்காவிற்குள் செல்வது போன்று எளிதாக உக்ரைனுக்குள் நுழைந்து விட முடியாது எனவும், உக்ரைன் தெருக்களில் ரஷ்யர்களின் ரத்த ஆறு ஓடும் நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, 5,000 உக்ரைனியர்கள் தலைநகர் நோக்கி பயணப்பட்டுள்ளதாகவும், இறுதி மூச்சுவரை போராடுவோம் என உறுதியளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் எப்போதும் போரை விரும்புவதில்லை எனவும் ஆனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் இறுதிவரை போராடவும் தயார் என தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, அமெரிக்க, பிரித்தானிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர்கள், ஆதரவிற்கும் ஆயுதங்களுக்கும் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போர் தொடர்பில் விவாதித்ததாகவும், எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *