இரண்டு ஆண்டுகளாக மேசையில் அமர்ந்தபடி இறந்து கிடந்த பெண்!

இத்தாலியில் 70 வயது பெண் ஒருவர் உயிரிழந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவரது சடலம் மேசையில் அமர்ந்தபடியே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் வடக்கு பகுதியில் கோமோ மாநிலத்தில் உள்ள பிரெஸ்டினோ எனும் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த Marinella Beretta எனும் 70 வயது பெண்ணுக்கு உறவினர் என்று யாரும் இல்லை என கூறப்படுகிறது.

இத்தாலியின் Lombardy பகுதியில், பலத்த காற்று வீசிவந்த நிலையில், மரினெல்லாவின் வீட்டு தோட்டத்தில் உள்ள சில மரங்கள் வேருடன் விழும் அபாயத்தில் இருந்தன.

இதனைக் கண்ட பொலிஸார், அந்த வீட்டில் உள்ளவர்களை தொடர்புகொள்ள கதவைத் திட்டியுள்ளார். யாரும் திறக்காததையடுத்து, சந்தேகத்தின்பேரில் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

அங்கே, மரினெல்லா ஒரு மேசையில் உட்கார்ந்தபடி உயிரிழந்து கிடைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெளியே எங்கும் காணப்படவில்லை என கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக பொலிசார் எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவருக்கு ஏதும் தவறாக நடந்திருக்கவோ அல்லது அவர் கொலை செய்யப்பட்டிருக்கவோ வாய்ப்பில்லை என கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, அவர் இறந்து 2 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்றும் உறுதிசெய்யப்பட்டது.

பார்த்துக்கொள்ள மட்டுமல்ல உயிரிழந்தபிறகு இறுதிச்சடங்கு செய்து அவரை அடக்கம் செய்ய யாருமின்றி அனாதையாக அவரது உடல் கிடந்துள்ளது. இந்த சம்பவம் இத்தாலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு நடந்துள்ளது ஒரு கொடுமையான மரணம், இது நமது மனசாட்சியை காயப்படுத்தியள்ளது என இத்தாலியின் குடும்ப அமைச்சர் எலினா பொனெட்டி Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் மனிதர்கள் இடையே ஒற்றுமை இருக்கவேண்டிய எவ்வளவு அவசியம் என்பதை மரிநெல்லாவின் சம்பவம் ஒரு பாடம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இத்தாலியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் தனியாக வாழ்கின்றனர் என்று தேசிய புள்ளியியல் நிறுவனம் (ISTAT) 2018-ன் அறிக்கை கூறுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *