துப்பாக்கி தூக்கி  போராளியாக மாறிய மியன்மார் மாணவியின் அனுபவம்!

பெப்ரவரி முதலாம் திகதி இராணுவசதிப்புரட்சிக்கு பின்னர் இராணுவ ஆட்சியை எதிர்ப்பதற்காக மியன்மாரில் இளைஞர்கள் யுவதிகள் தங்கள் உயிர்களை பணயம் வைத்துள்ளனர்.

ஜனநாய கோரும் இயக்கத்திற்கு எதிரான இராணுவத்தின் ஒடுக்குமுறை காரணமாக 295 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அரசியல் கைதிகளிற்கான சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் ஆயுதப்பயிற்சிகளை பெறுவதற்காக தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.

மியன்மாரின் முதலாவது புரட்சிகர குழுவில் இணைந்துகொண்டுள்ள யுவதியொருவருடன் கார்டியன் உரையாடியது.

இது அவரின் கதை
பெப்ரவரி முதலாம் திகதி நான் கண்விழித்தவேளை தொலைபேசி வலையமைப்பும் இணையசேவைகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. இராணுவசதிப்புரட்சி இடம்பெற்றுள்ளது என மக்கள் தெரிவித்தார்கள் நான் கவலையும் சீற்றமும் அடைந்தேன்.

பின்னர் மீண்டும் இணையச்சேவைகள் இயங்கதொடங்கியவேளை சதிப்புரட்சி குறித்த செய்திகள் எனது கையடக்கதொலைபேசியில் நிரம்பிவழிந்தன.

அதற்கு ஒரு வாரத்தின் பின்னர் நான் மத்திய மியன்மாரில் உள்ள எனது கிராமத்தில் இடம்பெற்ற சதிப்புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பெற்றோருடன் கலந்துகொண்டேன்.

இராணுவத்தினர் கைதுசெய்வது தாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஒடுக்குமுறையில் ஈடுபட்டாலும் கிராமத்தை சேர்ந்த அனைவரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

மார்ச்மாதமளவில் பொலிஸாரும் இராணுவத்தினரும் தொடர்ச்சியாக பொதுமக்களை சுட்டுக்கொல்ல தொடங்கினார்கள்.
இதனால் நான் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை நிறுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

பாடசாலைக்கல்வியை பூர்த்தி செய்த பின்னர் வர்த்தகத்தில் ஈடுபட்டு சாதிக்கவேண்டும் என்ற எனது கனவு சிதறடிக்கப்பட்டது.

ஜூன் மாதம் நான் புரட்சிகர குழுவில் இணைந்துகொள்ளப்போகின்றேன் என்பதை எனது பெற்றோருக்கு தெரிவித்தேன்.
எனது பெற்றோர்கள் மிகவும் கவலையடைந்தனர் – குறிப்பாக எனது அப்பா- எனினும் பின்னர் அவர்கள் புரட்சிக குழுவில் இணைந்துகொள்வதற்கு எனக்கு அனுமதி வழங்கினார்கள்.

எனது தாயார் எனது ஆடைகளை அடுக்கிவைத்தார்- மீண்டும் பார்க்கமாட்டோம் என்பதை உணர்ந்திருந்த நிலையில் நாங்கள் பிரிந்தோம்.

மைஆங்கில் உள்ள பயிற்சி முகாமிற்கு நான் சென்றேன்-இது பெண் போராளிகளிற்கான முகாம்.இது மியன்மாரின் முற்றிலும் பெண்களை கொண்ட புரட்சிகர குழு.நான் எனது பயிற்சியை ஆரம்பித்தேன்.

நான் முதல்தடவை துப்பாக்கியை தொட்டது அன்றுதான்,சாப்பாடு நான் வீட்டில் சாப்பிடும் சாப்பாட்டிற்கு மாறானதாக காணப்பட்டது.
பயிற்சிகள் கடுமையானவையாகவும் தீவிரமானவையாகவும் காணப்பட்டன – சிலவேளைகளில் நான் மயக்கமடைந்தேன்.
சிலவேளைகளில் பயிற்சிகள் மிகவும் கடினமாக காணப்பட்டவேளை நான் மனச்சோர்வடைந்தேன் – வீட்டை பற்றி எண்ணிணேன்.

மனச்சோர்வு ஏற்படும் போதெல்லாம் நான் ஏன் ஆயுதப்புரட்சிக்குழுவில் இணைந்துகொண்டேன் என்பதை நினைத்துபார்ப்பேன் – மீண்டும் உத்வேகம் வரும் – நான் மீண்டும் வலிமை மிக்கவளாhக மாறுவேன்.

எங்களிற்கு வெற்றிகிடைக்கும்வரை நான் திரும்பப்போவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *