இலங்கையில் கார்களின் விலை வீட்டின் விலையை விடவும் அதிகம்!

இலங்கையில் பயன்படுத்தப்படும் கார்கள் தற்போது தங்கத்தை ஒத்ததாக இருப்பதாக சர்வதேச ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏஎப்பி(AFP) இன் அண்மைய அறிக்கையின்படி, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி யால் கார்களின் விலைகள் வீட்டு விலைகளை விட அதிகமாக உயர்ந்துள்ளன.

22 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவு வங்குரோத்து நிலையின் விளிம்பில் உள்ளது. பண வீக்கம் அதிகமாக உள்ளதுடன் உணவு, மருந்து மற்றும் எரிபொருளை வாங்குவதற்குத் தேவையான டொலர்களை சேமிக்க அரசாங்கம் ‘அத்தியாவசியமற்ற’ இறக்குமதிகளைத் தடை செய்துள்ளது.

வாகனச் சந்தையில், இந்த இரண்டு வருடத் தடையானது இலங்கையின் வீதிகளில் இருந்து, தொழிற்சாலைகள் அண்மையில் வழங்கிய கார்களை நீக்குகிறது மற்றும் பயன்படுத்திய கார்களுக்கு உலகிலேயே அதிக விலையைச் செலுத்த வாங்குபவர்களை கட்டாயப்படுத்துவதாக அறிக்கை கூறுகிறது.

ஐந்து வருட பழைமையான டொயோட்டா லேண்ட் குரூஸர் தற்போது 62.5 மில்லியன் ரூபா  (312,500 டொலர்) விலைக்கு விற்கப்படுகிறது, இறக்குமதிக்கு முந்தைய விலையை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளதுடன்  நடுத்தர வர்க்கத்தினர் கொழும்பில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்க முடியும்  என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *