ஒமிக்ரோனுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடாது?

‘ஒமிக்ரோன் வகையுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடும்’ எனக் கணிப்பது ஆபத்தானது; மேலும் பல புதிய வகை கொரோனா தீநுண்மிகள் உருவாகும் நிலையே நிலவுவதாக’ உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

உலக சுகாதார அமைப்பின் நிா்வாகக் குழு கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:
கொரோனா தொற்று எப்படி பரவும், கடுமையான கட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்பது தொடா்பாக வெவ்வேறு நிலைகள் காணப்படுகின்றன. ஆனால், ஒமிக்ரோன் வகை கொரோனா தீநுண்மிதான் கடைசி அல்லது கொரோனா தொற்று முடிவுக்கு வரும் சூழலில் நாம் உள்ளோம் எனக் கணிப்பது ஆபத்தானது. மாறாக, உலகளவில் மேலும் பல கரோனா தீநுண்மிகள் உருவாவதற்கான சூழ்நிலைகள் உள்ளன.

ஆனால், உலகளாவிய சுகாதார அவசரநிலையாக கொரோனா இருப்பதை நாம் நிகழாண்டு இறுதியில் முடிவுக்கு கொண்டு வர முடியும். அதற்கு ஒவ்வொரு நாட்டிலும் மக்கள்தொகையில் 70 சதவீதம் பேருக்கு நிகழாண்டு ஜூன் மாதத்துக்குள் தடுப்பூசி செலுத்துவது, அதிக தொற்று அபாயம் உள்ள மக்கள் மீது கவனம் செலுத்துவது, பரிசோதனை, மரபணு பகுப்பாய்வை அதிகப்படுத்துவது போன்ற உலக சுகாதார அமைப்பின் இலக்குகளை நிறைவேற்ற வேண்டும்.

எதிா்காலத்தில் கொரோனாவுடன் வாழப் போகிறோம் என்பது உண்மை. கடுமையான சுவாச நோய்களுக்கான நிலையான மற்றும் ஒருங்கிணைந்த அமைப்புடன் கொரோனாவை எதிா்கொள்ள கற்றுக் கொள்வது அவசியம் என்றாா் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *