X-ray மூலம் கொரோனாவை கண்டறியும் நடைமுறை கண்டுபிடிப்பு!

எக்ஸ்-ரே மூலம் கொரோனாவை கண்டறியும் நடைமுறையை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகெங்கிலும் கொரோனா பரவலுக்கு பின், ஆர்டி -பிசிஆர் பரிசோதனை பயன்பாடு அதிகரித்துள்ளது.  கொரோனா உள்ளதா என்பதை கண்டறிய இது சிறந்த பரிசோதனையாக கருதப்பட்டாலும், இதன் முடிவுக்கான காலதாமதம், பாதகமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் எக்ஸ்-ரே மூலம் சில நிமிடங்களில்,  கொரோனா உள்ளதை கண்டறிய முடியும் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கொரோனா பரிசோதனைக்கு வரும் நபர்களின் எக்ஸ்-ரேயை ஏற்கனவே தொற்று பாதிப்புள்ளான 3000த்துக்கும் அதிகமான நோயாளிகளின் எக்ஸ்-ரேவுடன் ஒப்பிட்டு, எளிதில்  கண்டுபிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிறந்த முடிவுக்கு ஆர்டி- பிசிஆர் பரிசோதனை தான் சிறந்தது எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *