போர்ட்சிட்டி கொரோனா அலை உருவாகும் அபாயம்!

கொழும்பு துறைமுகநகரத்தின் புதிதாக திறக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் அதிகளவில் செல்வதால் போர்ட் சிட்டி கொரோனா அலை குறித்து அச்சம் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவுகின்றது  என தெரிவித்துள்ள சுகாதார வட்டாரங்கள் போர்ட்சிட்டிக்கு செல்பவர்களால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனகுறிப்பிட்டுள்ளன.

பொதுமக்கள் பெருமளவில் போர்ட்சிட்டிக்குள் நுழைவதற்காக காத்திருக்கின்றனர் அவர்கள் சமூகவிலக்கல் எதனையும் பின்பற்றவில்லை என சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை துறைமுக நகரிற்குள் சென்ற பலர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *