இலங்கையில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் GMOA எச்சரிக்கை!

ஒமிக்ரோன் பிறழ்வால் நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

நீண்ட வார இறுதியில் பொது ஒன்றுகூடல்களால் அடுத்த இரு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

ஒமிக்ரோன் பிறழ்வால் உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவில் நோய்த்தொற்று விகிதம் வெகுவாக அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையிலும் நோய்த்தொற்றுகள் சிறிதளவு அதிகரித்துள்ளது.

ஒமிக்ரோன் பிறழ்வின் அதிகம் பரவும் தன்மையால் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் ஒரு உயர்வு ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

தடுப்பூசி திட்டத்தின் வெற்றியினால் , தொற்றுநோயுடன் தொடர்புடைய  இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், 12-15 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் தொடர்பில் தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்,

மேலும் இதுபோன்ற கூற்றுக்கள் அறிவியல் சோதனைகள் மூலம் சரிபார்க்கப்படவில்லை.
எனவே வைரஸுக்கு எதிராக கணிசமான பாதுகாப்பை வழங்குவதால், அனைத்து நபர்களும் தடுப்பூசியைப் பெறுமாறும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *