படுத்துக் கிடந்தவர் தடுப்பூசி போட்டதும் எழுந்து நடந்த அதிசயம்!

இந்­தி­யா­வின் உத்­த­ர­காண்ட் மாநி­லத்­தில் எதிர்­பா­ராத அதி­சய சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது. அதா­வது, படுத்த படுக்­கை­யா­கக் கிடந்த ஆட­வர் ஒரு­வர், தடுப்­பூசி போட்­ட­தும் எழுந்து நடக்க ஆரம்­பித்­துவிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்­தியா வெளி­யிட்ட தக­வல் தெரி­வித்­தது. போகாரோ மாவட்­டத்­தில் உள்ள பேடார்­வார் கிரா­மத்­தில் வசித்து வரும் துலார்­சந்த், 44, விபத்­தில் சிக்­கி­ய­தால் கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக படுத்த படுக்­கை­யாக இருந்து வரு­கி­றார்.

அவ­ரது குர­லும் போய்­விட்­டது. இந்த நிலை­யில் ஜன­வரி 4ஆம் தேதி அவ­ருக்கு கொவி­ஷீல்ட் முதலாவது தடுப்­பூசி போடப்­பட்­டது. அந்த ஊசி போட்­ட­தும் துலார்­சந்­தின் உடல் அசைய ஆரம்பித்தது என்று பேடார்­வார் சமூக சுகா­தார நிலை­யத்­தில் பொறுப்பு மருத்­து­வ­ரான டாக்­டர் அல்­பெல் கெர்­கெட்டா தெரி­வித்­துள்­ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறு­வ­னத்­தி­டம் பேசிய துலார்­சந்­தும், தடுப்­பூசி போட்­டது நல்­ல­தாப் போச்சு, என் கை, கால்­களில் அசை­வு­ஏற்­பட்­டது என்று கூறி­யுள்­ளார். இதற்­கிை­டயே இது ஒரு மருத்­துவ அதி­ச­யம் இல்லை என்று கூறியுள்ள போகாேரா மருத்­து­வரான ஜிதேந்­திர குமார், அவ­ரது மருத்­து­வப் பின்­ன­ணியை ஆராய தனது மருத்­து­வக் குழு­வுக்கு உத்­த­ர­விட்டு உள்­ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *