கனடாவிலிருந்து இலங்கை செல்பவர்களிற்கு எச்சரிக்கை!

இலங்கையில் மோசடையும் பொருளாதார நிலைமை குறித்து தனது நாட்டிலிருந்து இலங்கை செல்பவர்களிற்கு கனடா எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இலங்கைக்கான பயண ஆலோசனையில் கனடா இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகள் உணவுகள் எரிபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என கனடா தெரிவித்துள்ளது.

பொருளாதார ஸ்திரதன்மை இன்மை சுகாதார சேவைகள் உட்பட பொதுச்சேவைகள் பாதிக்கப்படும் நிலைமையை ஏற்படுத்தலாம் என கனடா தெரிவித்துள்ளது.
பொருளாதார ஸ்திரதன்மை வளங்கள்  குறைந்தளவில் கிடைக்கும் நிலையை ஏற்படுத்தலாம் பாதுகாப்பு நிலவரம் மோசமடையும் நிலையை ஏற்படுத்தலாம் எனவும் கனடா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு செல்பவர்கள் உணவு எரிபொருள் குடிநீர் போன்றவற்றை நீண்டகால குழப்பநிலை ஏற்படக்கூடிய ஆபத்தினை கருத்தில் கொண்டுபோதியளவிற்கு தம்வசம் வைத்திருக்கவேண்டும் எனவும் கனடா கேட்டுக்கொண்டுள்ளது.

வர்த்தக நிலையங்கள் எரிபொருள் நிலையங்கள் மருந்தகங்களில் நீண்ட வரிசைகளை எதிர்பார்க்கவேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் கனடா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *