கொரோனா பாதிப்பால் ஆண் உறுப்பு சிறிதானதாக இளைஞர் புகார்!

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பின் தனக்கு ஆணுறுப்பு அளவு குறைந்து விட்டதாக அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

உலகம் முழுக்க பலருக்கு லாங் கோவிட் எனப்படும் நீண்ட கால கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது கொரோனா வந்து குணமடைந்தாலும் சில பாதிப்புகள், அறிகுறிகள் தொடர்ந்து நீடிக்கும். இல்லையென்றால் சில பக்க விளைவுகள் நீண்ட காலத்திற்கு இருக்கும்.

பலருக்கு மூச்சு விடுவதில் சிரமம், உடல் மரத்து போவது, ரத்த கட்டு, உடல் அசதி போன்ற பாதிப்புகள் நீண்ட காலத்திற்கு இருக்கும். 3400 பேரிடம் University College London நடத்திய ஆய்வு ஒன்றில் பலருக்கு இந்த நீண்ட கால பாதிப்புகள் இருந்துள்ளது.

image3 பேருக்கு கொரோனா இருந்தாலே கட்டுப்பாடு மண்டலம்.. அப்பார்ட்மெண்ட் கட்டிடங்களுக்கு புதிய உத்தரவு

200 பேர் பாதிப்பு

இந்த ஆய்வில் 200 பேருக்கு லாங் கோவிட் இருந்துள்ளது. அதே போல பலர் தங்களுக்கு ஆண் உறுப்பு சிறிதாகிவிட்டதாகவும், பாலியல் ரீதியான நாட்டம் குறைந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் அமெரிக்காவில் How To Do It என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க இளைஞர் தனது ஆண் உறுப்பு சிறிதாகிவிட்டதாக புலம்பி இருக்கிறார். அவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் இப்படி கூறியது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. அந்த பாட்காஸ்டில் பேசிய இளைஞர், எனக்கு 30 வயது ஆகிறது.

மோசமான கொரோனா

கடந்த ஜூலையில் எனக்கு கொரோனா வந்தது. மோசமான கொரோனா பாதிப்பு காரணமாக நான் அவதிப்பட்டு வந்தேன். அதன்பின் கொரோனாவில் இருந்து விடுபட்டும் சில அறிகுறிகள் எனக்கு இருந்தது. எனக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் சில நாட்களுக்கு ஆண் உறுப்பு விறைப்பு குறைபாடு இருந்தது. பின்னர் அதற்காக சிகிச்சைகள் எடுத்துக்கொண்ட பின் அது சரியாகிவிட்டது. ஆனால் எனக்கு வேறு பிரச்சனை ஏற்பட்டது போல தெரிகின்றது.

அளவு சிறிதாகிவிட்டது

எனது ஆண் உறுப்பு அளவு சிறிதாகிவிட்டது. எனக்கு கொரோனா வரும் முன் ஆண் உறுப்பு இருந்த அளவை விட 1.5 இன்ச் அளவு குறைந்துவிட்டது போல தோன்றுகிறது. இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. திடீரென அளவு குறைந்ததால் என்னால் வேறுபாட்டை பார்க்க முடிகிறது. என்னுடைய மருத்துவர்கள் இது தற்காலிகம்தான், நீண்ட காலத்திற்கு இருக்காது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் எனக்கு சரியாகவில்லை.

மன ரீதியான பாதிப்பு

எனக்கு இது மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. என்னுடைய தன்னம்பிக்கையை இது உடைத்து போட்டு இருக்கிறது, என்று குறிப்பிட்டுள்ளார். பொது நிகழ்ச்சி ஒன்றில் அந்த இளைஞர் இப்படி பேசியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. அவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. இதே நிகழ்வில் பேசிய டாக்டர் வின்டர் என்ற கொரோனா நிபுணர் கொரோனா வந்து குணமடைந்த ஆண்கள் பலர் இந்த பிரச்னையை எதிர்கொண்டதாக குறிப்பிட்டு உள்ளனர். பலருக்கு மன ரீதியாக அழுத்தம், பாலியல் அச்சம், பாலியல் மனஅழுத்தம் ஏற்பட்டு உள்ளது.

நீண்ட கால பாதிப்பு

இதனால் அவர்களின் ஆண் உறுப்பு விறைப்பு தன்மை, பாலியல் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சில வாரங்களில் சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு நீண்ட காலம் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் இதற்காக சிகிச்சை எடுக்க வேண்டி இருக்கும். கொரோனா ரத்த நாளங்களையும் பாதிக்க கூடியது. பலருக்கு ரத்த பாதையில் அடைப்பு ஏற்படுவதால் ஆண் உறுப்பு விறைப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது என்று அந்த மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *