திருமண போட்டோ சூட்டை சுடுகாட்டில் நடத்திய தம்பதிகள்!

திருமணத்திற்கு முந்தைய போட்டோ சூட்டை சுடுகாட்டில் ஒரு தம்பதி நடத்திய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருமண ஜோடிகள் திருமணத்திற்கு முன்பு வித்தியாசமாக போட்டோ ஷூட் எடுப்பது தற்போது சாதாரண விஷயமாகிவிட்டது.

போட்டோ ஷூட்கள் ஏதாவது ஒரு கதையை சொல்லும்படி அமைந்திருக்கும் இப்படியாக சமீபத்தில் ஒரு ஜோடி திருமணத்திற்கு முன்பு எடுத்த போட்டோ ஷூட் தற்போது டிரெண்டாகி வருகிறது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு ஜோடி திருமணத்திற்கு முன்பு சுடுகாட்டு தீம்மில் போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளனர்.

கல்லறைகள், பேய்கள், இறுதி சடங்கு ஆகியவற்றை தீம்மாக கொண்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தாய்லாந்து புகைப்பட கலைஞரான NONTS KONGCHAW என்றபவர் தனது பேஸ்புக்கில் கடந்த வாரம் பதிவிட்டிருந்தார்.

இந்த போட்டோ ஷூட் தற்போது வைரலாகி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

திருமணத்திற்கு பின்பு போட்டோ ஷூட் எடுக்கிறேன் என்று எல்லையை மீறி யோசித்து இவர்கள் எடுத்த போட்டோ ஷூட் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பலர் இவ்வாறு போட்டோ ஷூட்டை திருமணத்திற்காக எடுப்பது நல்ல சகுணம் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலர் போட்டோ ஷூட் தம்பதியினரை செமையாக கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *