கொரோனா தொற்றால் குழந்தை பெறும் வாய்ப்பு குறைவு ஆய்வில் தகவல்!

கொரோனா தொற்று பாதித்தவர்கள் குணமடைந்த பின்பும் குழந்தை பெறும் வாய்ப்புகளை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக பெல்ஜியத்தை சேர்ந்த கொரோனா நோயாளியை ஆய்வு செய்த போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது Fertility and Sterility journal என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்குப் பின் தீவிரமாக இறங்கிய இந்தக் குழு கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து ஒரு மாதமே ஆன 35 ஆண்களின் விந்தணுக்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தது. அதில் 60 சதவீதம் விந்தணுக்களின் ஆற்றல் வீழ்ச்சி அடைந்திருப்பதை கண்டறிந்துள்ளது. அதோடு 37 சதவீதம் விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதை கண்டறிந்துள்ளது.

பின்பு 35 வயதுக்கு உட்பட்ட 120 ஆண்களின் விந்தணுக்களை சோதனை செய்துள்ளது. இவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணடைந்து 52 நாட்கள் ஆனவர்கள்.

ஆண்களின் பாலியல் வாழ்க்கை குறித்து பரவும் கட்டுக்கதைகளும், உண்மைகளும்
ஆண்களின் பாலியல் வாழ்க்கை குறித்து பரவும் கட்டுக்கதைகளும், உண்மைகளும்

அதன் பிறகு குணமடைந்து இரண்டு மாதங்கள் ஆன 51 ஆண்களின் விந்தணுக்களை ஆய்வு செய்தது. அதில் 37 சதவீதம் விந்தணுக்களின் தரம் குறைந்திருந்தது. பின் 29 சதவீதம் எண்ணிக்கை குறைந்திருந்தது. அடுத்ததாக இன்னும் சில நாட்கள் கடந்த நிலையில் சோதனை செய்த போது கூடுதல் சரிவைப் பெற்றிருந்தது. அதாவது 28 சதவீதம் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 6 சதவீதம் அதன் தரம் குறைந்திருந்தது.

இந்த ஆய்வின் மூலம் கிடைத்த மற்றொரு தகவல் “பாலியல் தொடர்புகள் மூலம் கொரோனா தொற்று பராவது” என்பதை உறுதி செய்துள்ளது. அதாவது ஆண்களின் விந்தணுக்கள் மூலமாக கொரோனா பரவாது என்பதை கண்டறிந்துள்ளது.

ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தால் கொரோனா தொற்றிலிருந்து விலகி இருப்பது அவசியம் என்று கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி குணமடையும் காலம் அதிகரிக்க அதிகரிக்க இந்த விந்தணுக்களின் பாதிப்பு அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பதை கண்டறிய இன்னும் காலம் தேவைப்படுகிறது. வலுவான ஆராய்ச்சிகள் தேவை என்பதையும் கூறியுள்ளனர். இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் விந்தணுக்களின் தரம் குறைதல் என்பது ‘தற்காலிகமே’ எனக் கூறுகிறது.

எனவே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் உடனே அதற்கு முயற்சி செய்வது பலன் அளிக்காது. இயல்பு நிலைக்கு திரும்ப மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என கணித்துள்ளது. இருப்பினும் இதை உறுதி செய்ய மற்றொரு ஆய்வு தேவை என கூறியுள்ளர்.

இந்த விந்தணு பாதிப்பு என்பது கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்தாலும் அல்லது அறிகுறியே இல்லாத கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரே மாதிரியான விளைவை உண்டாக்குவதாக கூறியுள்ளனர். இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்கின்றனர்.

கொரோனா எவ்வாறு விந்தணுக்களை பாதிக்கிறது..?

இன்ப்ளூயன்ஸா ( influenza ) போன்ற சில வைரஸ்கள் ஏற்கனவே விந்தணுக்களை சேதப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை காய்ச்சலின் விளைவாக ஏற்படும் அதிக உடல் வெப்பநிலையின் காரணமாக விந்தணுக்களை பாதிக்கலாம் என்று கண்டறிந்தது.

ஆனால் COVID-19 விஷயத்தில், காய்ச்சல் அல்லது அறிகுறிகளின் தீவிரத்தன்மை மற்றும் விந்தணுக்களின் தரம் ஆகியவற்றுக்கு இடையே எந்த தொடர்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறியவில்லை. அதற்கு பதிலாக, வைரஸுக்கு எதிராக உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராட்டமே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டவர்களை ஓமைக்ரான் வகை கொரோனா பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நோயாளிகளின் இரத்த சீரம் ( blood serum ) உள்ள குறிப்பிட்ட கோவிட்-19 ஆன்டிபாடிகளின் அதிக செறிவுகள், விந்தணுக்களின் செயல்பாடு குறைவதற்கு காரணமாக இருக்கலாம் என சோதனைகளில் காட்டியுள்ளது. இது தற்காலிக விந்தணு செயலிழப்புக்கான தாக்கமாகவே பார்க்கப்படுகிறது.

வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விந்தணுக்களில் கோவிட்-19 ஆர்என்ஏ இல்லை என்று ஆய்வில் தெரியவந்தாலும், ஆன்டிபாடிகள் விந்தணுவைத் தாக்குவதால், வைரஸ் உச்சக்கட்டத்தின் போது பாதிப்பை தீவிரமாக்கலாம் என்று கூறுகிறது.

அதோடு முடிவில் இந்த ஆய்வு சீனாவின் வுஹானில் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வை சுட்டிகாட்டுகிறது. அங்கு பாதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகளின் விந்து மாதிரிகள் மீதான PCR சோதனைகள் வைரஸுக்கு சாதகமாக இருந்ததாக கண்டறியப்பட்டதை காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *