உலகிலேயே கடலில் மிதக்கும் ஹோட்டல்!

உலகில் பலவிதமான அதிசயங்கள் நடைப்பெறுவது உண்டு. அந்த வகையில் உலகின் முதல் மிதக்கும் ஹோட்டல் துபாயில் கட்டப்படவிருக்கிற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சுவிட்சர்லாந்த் கெம்பின்சி (KEMPINSKI) ஹோட்டல் நிறுவனமானது, அந்த சொகுசு மிதக்கும் ஹோட்டலைக் கட்டி நடத்துகிறது. இந்த ஹோட்டலானது வரும் 2023-ம் ஆண்டு அது திறக்கப்படுகிறதாம்.

துபாயின் புகழ்பெற்ற ஜுமெய்ரா கடற்கரை சாலையில் ஹோட்டல் அமைந்திருக்கும். வரும் 2023-ம் ஆண்டு அது திறக்கப்படும். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் எதிர்பார்க்கக்கூடிய எல்லா சொகுசு வசதிகளும் அதில் இருக்கும்.

மேலும், கெம்பின்சி (KEMPINSKI) மிதக்கும் ஹோட்டலில் மொத்தம் 156 அறைகள் இருக்கும். அதில் தங்கும் விருந்தினர்கள் விரைவுப்படகுகளிலேயே நேரடியாக தங்கள் அறைகளுக்குச் செல்லும் வசதி இருக்கும்.

அதுமட்டுமின்றி, 16 சொகுசுப்படகுகளை நிறுத்தி வைக்கவும் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க மிதக்கும் மேடையும் அமைக்கப்படும். இவற்றில் விருந்தினர்கள் மிடுக்குடன் வந்திறங்கலாம்.

மேலும், ஹோட்டல் கட்டடத்தில் நான்கு பகுதிகள் இருக்கும். இதன்பின் நடுவில், கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு பிரமிட் வடிவம் நான்கு கட்டடங்களையும் இணைக்கும். அத்துடன் ஹோட்டலின் பிரதான கட்டடத்தைச் சுற்றிய சொகுசு விழாக்களில் சில, விற்பனைக்கு விடப்படும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *