முதல் குழந்தை பிறந்து 3 மாதத்தில் இரண்டாவது குழந்தை பெற்ற விசித்திர பெண்!

இந்தியாவில் பெண் ஒருவர் முதல் குழந்தை பெற்ற வெறும் மூன்று மாதம் இடைவெளியில் இரண்டாவது குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஹர்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரீட்டா தேவி. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கர்ப்பமாக இருந்த பெண் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி உஜியர்ப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இதையடுத்து ஜனனி சுரக்ஷ யோஜனா திட்டத்தின் மூலம் அதற்கான சலுகைகள் முறைப்படி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரே கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதி மீண்டும் பிரசவத்திற்காக அதே மருத்துவமனையில் சேர்ந்து நவம்பர் 4ஆம் திகதி ஒரு ஆண் குழந்தையை பெற்றதாக மீண்டும் அவருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளின் பட்டியலை அரசு கிளார்க் ஒருவர் தயார் செய்த போது ஒரே பெண்ணின் பெயர் இரண்டு முறை வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார்.

இது எப்படி சாத்தியம் ஒரு குழந்தை பெற்ற பெண் எப்படி 3வது மாதமே அடுத்த குழந்தையை பெற முடியும் என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் உரிய விசாரணை நடைபெற்று வருகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *