போப் இறந்துவிட்டார் நேரலை  செய்தியால் பரபரப்பு!

பிரித்தானியாவின் பிரபல தொலைக்காட்சியான ITV-ல் போப் ஆண்டவர் இறந்துவிட்டதாக நேரலை செய்தியில் தவறுதலாக தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரிட்டிஷ் தொலைக்காட்சியான ITV News அதன் நேரடி கிறிஸ்துமஸ் தின கவரேஜின் போது, செய்தி தொகுப்பாளர் கைலி பென்டெலோ (Kylie Pentelow), போப்பின் வருடாந்திர கிறிஸ்துமஸ் உரையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, ​​அவர் தற்செயலாக போப் மரணித்ததாக அறிவித்தார்.

போப்பின் உரையை சுருக்கமாகக் கூறும்போது, ​”தடுப்பூசிகள் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று போப் கூறினார். அவரது மரணம் அறிவிக்கப்பட்டது” என்று கூறிவிட்டார்.

எனினும், அவள் உடனடியாக தன் தவறை உணர்ந்து, ‘எக்ஸ்கியூஸ் மீ’ என்று தன்னைத் திருத்திக் கொண்டார்.

இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. ஒருபக்கம், இது ட்ரோல் செய்யப்பட்டாலும், மறுபுறம் இந்த தவறு சர்ச்சையை கிளப்பியதுள்ளது.

இது தற்செயலாக நடந்ததா அல்லது தயார் செய்யப்பட்ட ஸ்கிரிப்ட்டில் அப்படி இருந்ததா என பலரும் யூகித்துவருகின்றனர்.

உயிருடன் இருக்கும் போப் பிரான்சிஸ், சனிக்கிழமை வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் இருந்து தனது கிறிஸ்துமஸ் தின உரையை ஆற்றினார்.அப்போது, சிரியா, ஏமன் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் நடந்து வரும் மோதல்களைக் கண்டித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *