கத்தியால் குத்தினாலும் ஒன்றும் ஆகாத  டி-ஷர்ட் விரைவில் அறிமுகம்!

கத்திக்குத்தில் இருந்து தப்பிப்பதற்கான சூப்பரான டி-ஷர்டுகளை பிரபல நிறுவனம் தயாரித்து அசத்தி இருக்கிறது. இங்கிலாந்துல் செயல்படும் ஆயுத நிறுவனமான பி.பி.எஸ்.எஸ் ஒரு அருமையான டி-ஷர்ட்டை உருவாக்கியுள்ளது.

இந்த டி-ஷர்ட் ஆனது கூர்மையான கத்திக்களைக்கொண்டு தாக்கினாலும், அதிலிருந்து உங்களை பாதுகாக்கும். இதனால், இந்த டி-ஷர்ட், முதன்மையாக உடல் பாதுகாப்பு கவசமாக கூறப்படுகிறது.

இந்த சிறப்பு டி-ஷர்ட்டை கார்பன் பைபரிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது பருத்தி இழையை விட மிகவும் வலிமையானது. இதுபோன்ற கவசம் மற்றும் துப்பாக்கி நிறுவனங்கள் சாதாரண குடிமக்களுக்கு இதை அங்கிகரிப்பதில்லை. விரைவில் அறிமுகமாக உள்ள இந்த டி-ஷர்ட்டின் விலை ரூ.16,000 முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், டி-ஷர்டை அணிந்த ஒரு நபர் கூர்மையான கத்தியால் தாக்கப்பட்டார். தாக்குதலுக்குப் பிறகு, டி-ஷர்ட் அகற்றப்பட்டது.

அந்த நபரின் உடலில் ஒரு கீறல் கூட காணப்படவில்லை. டீ-சர்ட் மிகவும் தடிமனாக இருந்தது, கூர்மையான ஆயுதம் கூட உடலின் உட்புறத்தை சேதப்படுத்த முடியாது என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *