இலங்கையில் உள்ள மர்ம மலையை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பமாகியுள்ளது.

இதனால் இலங்கையை நோக்கி உள்நாட்டு மட்டும் வெளிநாட்டு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

கோவிட் காரணமாக புனித யாத்திரைக் காலங்களில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, சிவனொளிபாதமலைக்குச் செல்லும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தடுப்பூசி அட்டை அல்லது அதன் நகலை உடன் வைத்திருக்க வேண்டும். இது இல்லாமல் சென்னால் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டாது.

புதிதாக வெளியிடப்பட்ட விதிமுறைகளில் யாத்திரீகர்கள் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்யவோ அல்லது பராமரிக்கவோ கூடாதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை நிர்மாணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

துலங்காத பல மர்மங்களை கொண்ட ஆச்சரியம்

இலங்கையில் இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என நான்கு மதத்தவரும் ஒற்றுமையாக சென்று வழிப்படக்கூடிய ஒரு இடமாகத் திகழ்கிறது சிவனொளிபாதமலை .

உலகில் இன்றைக்கும் துலங்காத பல மர்மங்களை கொண்ட இம் மலை உச்சி சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ளது. மஸ்கெலியா பஸ் தரிப்பிடத்தில் இருந்து 18.8 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது இந்த மலை.

ஏறக்குறைய 7359 அடி உயரம் கொண்ட கூம்பு வடிவாக சிவனொளிபாத மலையின் உச்சியில் 1.8 மீற்றர் நீளமான பாதம் ஒன்று உள்ளது. இந்தப் பாதம் இந்துக்களைப் பொறுத்தவரை சிவபெருமானுடையது என்று நம்புகிறார்கள். அதனால், சிவனொளிபாத மலை என்று அழைக்கின்றார்கள்.

ஆனால், பௌத்தர்கள் அது புத்தரின் காலடித்தடம் எனக்கூறி ஸ்ரீ பாத என்று அழைக்கின்றனர். முஸ்லிம்கள், அதனை முதல் மனிதன் ஆதாமின் பாதம் என்று நம்புகின்றனர். இதனால் ஆதாமின் மலை என அவர்கள் இம்மலையை அழைக்கிறார்கள். இப்படி பல பெயர்களால் வேறுபட்டு இருக்கும் இம்மலை ஒற்றுமையின் ஓர் சின்னம் என்று சொல்வதில் இலங்கையர்களுக்கு பெருமை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *