பூமியை போன்று செவ்வாய் கிரகத்தில் பெரிய பள்ளத்தாக்கு கண்டுபிடிப்பு!

பூமியில் இருப்பதை போன்று செவ்வாய் கிரகத்தில் பெரிய பள்ளத்தாக்கும், அதில் மறை நீர் இருப்பதற்கான ஆதாரத்தையும் The Roscosmos ExoMars Trace Gas Orbiter கண்டறிந்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கூட்டாக செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக The Roscosmos ExoMars Trace Gas Orbiter என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.

குறித்த விண்கலம் Fine Resolution Epithermal Neutron Detector (FREND) என்ற கருவி மூலம் செவ்வாய் கிரகத்தில் மறைநீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில், பிரேக்கிங் நியூஸ்- நான் மறைநீரை கண்டறிந்து விட்டேன், அது பனிக்கட்டியாக இருக்கலாம். தண்ணீரை உள்ளடக்கிய தாதுக்களாக இருக்கலாம்.

அங்கிருந்த பள்ளத்தாக்கு பெரியது. மிகமிகப் பெரியது. இனி எதிர்காலத்தில் வரும் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்பரப்பில் சுமார் 40 சதவிகித தண்ணீரை உள்ளிடக்கியதுடன், இதன் பரப்பளவு நெதர்லாந்து நாட்டை விட பெரியதாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *