தரகுப் பணம் பெறவே சீனாவுக்கு பெரிய தொகை பணம் தயாசிறி தெரிவிப்பு!

சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், நிராகரிக்கப்பட்ட சேதனப் பசளை தொகைக்கு பணத்தை செலுத்துவது தேசிய குற்றம் என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர (Dayasri Jayasekara) தெரிவித்துள்ளார்.

தரகு பணத்தை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு மிகப் பெரிய தொகை சீன நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த தரகு பணத்தை பெற்றுக்கொள்ளவே 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துகின்றனர் என்பது தெளிவானது.

ஐந்து சதம் கூட செலுத்தப்படாது, கப்பலில் இருக்கும் பசளை தொகை ஏற்க போவதில்லை என அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார். அவர் கூறியதற்கு புறம்பாக தற்போது நடந்துள்ளது.

இவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களிடம் தனிப்பட்ட ரீதியில் இந்த பணத்தை அறவிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *