நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?


நடிகை அனுஷ்காவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகின்றது.

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் தேவசேனையாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட அனுஷ்கா அப்படத்துக்கு பின் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

இவர் சமீபத்தில் சைலன்ஸ் என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இந்த படம் அவர் எதிர் பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி அவருக்கு ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் தெரிவிக்கபட்டு உள்ளது. அனுஷ்காவுக்கு பெங்களூரு, ஐதராபாத் போன்ற முன்னணி நகரங்களில் பல சொகுசு வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வரத் துவங்கி உள்ளதால் அடுத்த ஆண்டில் சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *