உலகத்தில் உள்ள மிகப்பெரிய 8 இரகசியங்கள்!



இரகசியம் என்றாலே அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் ஆவல் இருக்கத் தானே செய்யும்? இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பல இரகசியங்கள் இரகசியங்களாகவே உள்ளது; பலருக்கு அதை பற்றி கடைசி வரை தெரிவதே இல்லை. சில இரகசியங்கள் சொல்லப்பட்டாலும் அதில் பிரயோஜனம் எதுவும் இருப்பதில்லை. மாறாக, ஏதோ ஜென்மம் எடுத்ததே அந்த இரகசியத்தை அறிந்து கொள்வதற்காக தான் என்பதை போல சில இரகசியங்களை தோண்டி பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் ஏற்படும்.

அப்படிப்பட்ட நேரத்தில், இரகசியங்களின் முக்கியத்துவத்தை லேசாக எடுத்து கொள்ள முடியாது. உலகத்தில் அப்படி முக்கியமாக கருதப்பட்ட இரகசியங்களைப் பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். உலகத்தில் உள்ள மிகப்பெரிய இரகசியங்களில் இவைகளும் அடங்கியிருப்பதை எண்ணும் போது உங்களுக்கு ஆச்சரியத்தை வரவழைக்கும்.

எந்த இரகசியங்கள் உலகத்தில் மிகப்பெரிய இரகசியங்கள் என்ற கேள்வி மனிதனுக்கு எழுவது அவனின் இயல்பான பண்பே. சில இரகசியங்கள் உலகத்தில் மிகப்பெரிய இரகசியங்கள் என்பதால் அவைகள் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. சில இரகசியங்கள் உலகத்தின் மிகப்பெரிய இரகசியமாக கருதப்படுவதால், அவைகளை வெளியில் கசிய விட்டால் அவை பல குழப்பங்களையும் பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும்.

அப்படி உலகத்தில் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்ட சில விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாமா?

பிறரின் மீது நமக்கு ஏற்படும் ஈர்ப்புகள்

நமக்கு ஒரு வயதாகி எப்போது எதிர் பாலினத்தை உணர முடிகிறதோ அப்போதிலிருந்தே யார் மீதாவது ஒரு ஈர்ப்பு வந்திருக்கும். உண்மை தானே? நாம் வளர வளர அந்த ஈர்ப்பும் பலர் மீது வளர்ந்து கொண்டே போகும். இதில் முக்கியமானது என்னவென்றால் நமக்கு பலரின் மீது இருந்து ஈர்ப்பை நாம் வெளியில் சொல்வது கிடையாது. உலகத்தில் மிகவும் கவனமாக காக்கப்படும் இரகசியங்களில் இது ஒன்றாகும்.

இறந்த கால உறவுகள்

ஆரோக்கியமான உறவிற்குள் நுழைவதற்கு முன் பலருக்கும் இறந்த கால உறவுகள் இருந்திருக்க கூடும். ஆனால் அதனை அனைவரும் வெளிப்படுத்துவதில்லை.

தொிந்துகொள்ளுங்கள் ! அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் என்னென்ன தெரியுமா?
ஆச்சரிய பட வைத்த சம்பவம்! 3 ஆண்டுகளாக ஆவியால் நரக வேதனையை அனுபவித்த பெண்…
அடேங்கப்பா! சிகப்பு நிற புடவையில் கடற்கரை அழகில் ஜெலிக்கும் லொஸ்லியா…
சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க.
எண்ணெய் தளங்கள்

உலகத்தில் உள்ள பல நாடுகளுக்கு, முக்கியமாக அரபு நாடுகளுக்கு வருவாயின் முக்கிய மூலமாக விளங்குவது எண்ணெயே. உலகத்தில் மிகவும் வலுவுள்ள கூட்டமைப்புகளில் ஒன்றான OPEC, எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தி வருகிறது. அதனால் வளமுள்ள எண்ணெய் தளங்களைப் பற்றி இரகசியம் காக்கப்படுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை தானே.

கார்பரேட் உலகத்தின் வணிக இரகசியங்கள்

பல நிறுவனங்கள் ஒரே வகையான பொருளை விற்று வரும் விஷயத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் ஏன் அவைகளில் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் பிறரை காட்டிலும் மிகவும் சிறப்பாக செயலாற்றுகிறார்கள்? ஆம், அதற்கு காரணம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய இரகசியங்களில் ஒன்றான வணிக இரகசியங்கள்.

வங்கி கணக்குகள்

உலகத்தை சுற்றியுள்ள பல நாடுகளும் இரகசியமான வங்கி வணிகத்திற்கு எதிராக குரலெழுப்பி, அதற்கு எதிரான தீர்மானத்தையும் எடுத்துள்ளனர். உலகத்தில் உள்ள மிகப்பெரிய இரகசியங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது வங்கி கணக்குகள் இரகசியம். பணத்தின் சுற்றோட்டம் எந்தளவிற்கு உள்ளதோ அதை பொறுத்து தான் பணத்தின் மதிப்பு அமையும். அதனால் எவ்வளவு பணம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு தெரியாது.

மருத்துவ வரலாறுகள்

உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய இரகசியங்களில் இதுவும் ஒன்றாகும். பிற தகவல்களை போல் மருத்துவ வரலாறுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தால், நோயாளிகளுக்கும் அவர்களின் அடையாளத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம்.

நீதித்துறை செயற்பாடு

ஆம், இது பட்டியல் முதல் இடத்தில் இருக்க வேண்டியவை. வழங்கப்படும் அனைத்து தீர்ப்புகளும் முழுமையாக வெளிப்படுத்தப்படுவதில்லை. பல விஷயங்கள் மறைக்கப்பட்டு பொது மக்களுக்கு தெரியாத வண்ணம் தான் இருக்கும். அதே போல் அனைத்து நீதிபதிகளும் நீதி தேவதையின் பிள்ளையாக இருப்பார் என எதிர்ப்பார்க்க முடியாது. பலரும் அப்படி தான் என்றாலும் கூட, சிலரால் முரண்பாடுகள் ஏற்படலாம்.

இராணுவம் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி இரகசியங்கள்

உலகத்திலேயே ராணுவ இரகசியங்கள் தான் மிகப்பெரிய இரகசியமாகும். ஒரு நாட்டின் வணிகமும் நிதியும் செழிப்பாக இருக்க முக்கிய அம்சமாக ராணுவத்தை தான் பல நாடுகளும் கருதுகிறது. அமெரிக்க மற்றும் ரஷ்யா போன்ற சில நாடுகள் ராணுவ தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேறி இருப்பதாக பெரியளவில் நம்பப்பட்டாலும், அது எந்தளவிற்கு நழுவித் தப்பித்துக் கொள்கிற இரகசியமாக உள்ளது என்பது கேள்விக் குறியே. ஏன் அந்தத்த நாட்டு குடிமக்களிடம் கூட இதற்கு பதில் கிடையாது. இது ராணுவத்தில் மட்டுமல்லாது விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *