தாய் மற்றும் மகளை கொலை செய்த இலங்கை அகதிகள் கைது!

தமிழகத்தின் இராமேஸ்வரம் – மண்டபம் பகுதியில் தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக கடமையாற்றிய 58 வயதான பெண், அவரது 34 வயதான மகளின் உடல்கள் கருகிய நிலையில் (09) ஆம் திகதி மண்டபத்திலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டன.

உயிரிழந்தவர்களின் வீட்டின் கட்டிட பணிகளில் ஈடுபட்டு வந்த இலங்கை அகதிகள் மூவர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மண்டபம் முகாமில் வசித்து வரும் புதுக்கோட்டை அகதிகள் முகாம் சசிகுமார் 35, கரூர் மாவட்டம் குளித்தலை அகதிகள் முகாம் ராஜ்குமார் (எ) சம்பூர்ணலிங்கம் 30 ஆகியோரை மண்டபம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன்,இவர்களிடமிருந்து தங்க வளையல் 4, செயின் 2, தோடு 2 ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். 

டிசம்பர் 6 ஆம் திகதி வீட்டிற்குள் நுழைந்த குழுவினர் தாயையும்,மகளையும் தாக்கிக் கொலை செய்து  உடல்களை தீயிட்டு கொளுத்திவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *