2008 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்தவர்கள் புகை பிடிக்கத் தடை!

2008ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் புகை பிடிப்பதற்கு தடை விதிக்க நியூசிலாந்து முடிவு எடுத்துள்ளது. புகை பிடிப்பதால் உலகம் முழுவதும் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதை நாம் காண்கிறோம். சிகரெட் மற்றும் புகையிலையை பயன்படுத்துவதால் உலகம் முழுவதும், வருடத்துக்கு 80 லட்சம் பேர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இதை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள், உலகம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. பல நாடுகள் அந்த பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்நிலையில், இதை தவிர்க்கும் விதத்தில் பொதுமக்கள் புகை பிடிப்பதை தவிர்க்க நியூசிலாந்து அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி தற்போதைய இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கவும், எதிர்கால சந்ததியினர் யாரும் புகை பிடிப்பதை தடுக்கவும் வழிவகை ஏற்படுத்தக்கூடும். இதற்காக புதிய சட்டத்தை ஏற்படுத்தும் நியூசிலாந்து, 2027ம் ஆண்டு முதல் இச்சட்டத்தை நடைமுறை படுத்தப்பட முடிவு எடுத்துள்ளது. இந்த சட்டம், 14 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள் வாழ்நாள் எல்லாம் புகைபிடிக்க தடையாக அமையும்.

புகையிலைக்கு எதிராக உலகிலேயே கடுமையான நடவடிக்கையாக கருதப்படும் இதை தவிர வேறு எந்த முயற்சியாலும் பொதுமக்கள் புகை பிடிப்பதை தடுக்க முடியாது என அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சட்டத்தால் புகைப்பிடிக்கும் பழக்கம் அடியோடு ஒழிந்துவிடாது என்றாலும் அந்த பழக்கம் ஒவ்வொரு வருடமும் குறையும் என்று நம்பப்படுகிறது. சிகரெட்டில் உள்ள நிகோட்டின் அளவு குறைக்கப்பட்டு புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடும் முயற்சிகள் ஊக்குவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *