சீனாவிடம் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் விமான நிலையத்தை இழக்கும் நாடு!

சீனாவுடன் பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் தமது ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தை உகண்டா சீனாவிடம் இழந்துள்ளதாக ஆபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாத காரணத்தினால் இவ்விமான நிலையம் சுவீகரிக்கப்படவுள்ளதாகக் குறித்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காகவே உகண்டாவினால் 2015 ஆம் ஆண்டில், சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி (EXIM) வங்கி, உகண்டாவிற்கு 207 மில்லியன் டொலரை இரண்டு சதவீத வட்டி அடிப்படையில் கடனாக வழங்கியுள்ளது.

இதனிடையே உகண்டா தனது கடனைத் திருப்பச் செலுத்த முடியாமல் போனால், என்டெப்பெ விமான நிலையத்தைச் சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தக் கடன் ஒப்பந்தத்தின் சரத்தொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *