கை, கால் கட்டப்பட்ட 800 ஆண்டுகளுக்கு முந்தைய சடலம் கண்டுபிடிப்பு!

பெரு நாட்டில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட, மனித உடலை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். பெரு நாட்டின் லிமா பிராந்தியத்தில் கஜமர்குயில்லா என்னும் இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பூமிக்கடியில் வட்ட வடிவிலான அறைக்குள் பதப்படுத்தப்பட்ட உடல் இருப்பதை கண்டறிந்தனர். கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு அமர்ந்த நிலையில் இருந்த உடலுக்கு அருகே, பானை, சிறிய வடிவிலான குடுவை மற்றும் உணவு தானியங்கள் போன்றவையும் கிடந்தன.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட, மனித உடலாக இருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் கூறுகின்றனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘சக்லா மலைப்பகுதியில் வாழ்ந்து வந்த ஆதிகால சமூகத்தை சேர்ந்தவரின் உடலாக இருக்கலாம். தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள உடலின் துல்லியமான காலத்தினை அறியும் வகையில், ரேடியோ கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதிக்க முடிவு ெசய்துள்ளோம். இந்த உடலின் பாலினம் குறித்து தெரியவில்லை.

சக்லா மலைப்பகுதியில் வாழ்ந்து வந்த, ஆதி கால சமூகத்தை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை கயிறுகளால் கட்டும் பழக்கத்தை கொண்டிருந்தது வரலாற்று ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது’ என்று தொல்லியல் துறையினர் கூறினர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *