மீண்டும் அச்சுறுத்தும் புதிய கொரோனா வைரஸின் அறிகுறிகள்!

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்ன என்பது குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. இதனால் இதைக் கட்டுப்படுத்துவதில், தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதாகவும், இது மிகவும் ஆபத்தானதாக இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா மாறுபாடு B.1.1.529 என்று அழைக்கப்படுகிறது.

இந்த மாறுபாடு முன்பு பரவிய கொரோனா வைரஸை விட ஒட்டுமொத்தமாக 50 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இதில் ஸ்பைக் புரதத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் உள்ளன.

இதற்கு முன்பு பரவிய டெல்டா மாறுபாடு 2 பிறழ்வுகளும் மற்றும் பீட்டா மாறுபாடு 3 பிறழ்வுகளும் இருந்தன. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த தென் ஆப்பிரிக்கா கொரோனா வைரஸ் 50 பிறழ்வுகளைக் கொண்டுள்ளதால், உலக நாடுகளிடையே மீண்டும் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரித்தானியா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் தென் ஆப்பிரிக்கா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.

இந்த தென்னாப்பிரிக்கா மாறுபாடு கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன என்பது வெளியாகியுள்ளது.

காய்ச்சல் இருமல்
சோர்வு சுவை அல்லது வாசனை இழப்பு
குறைவான பொதுவான அறிகுறிகள்

தொண்டை புண்
தலைவலி வலி மற்றும் வலி வயிற்றுப்போக்கு
தோலில் ஒரு சொறி விரல்கள் அல்லது கால்விரல்கள் சிவப்பு
எரிச்சலூட்டும் கண்களின் நிறமாற்றம்
தீவிர அறிகுறிகள்

சுவாசிப்பதில் சிரமம்
மூச்சுத் திணறல் பேச்சு அல்லது இயக்கம் இழப்பு
குழப்பமான மார்பு வலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *