உணவுப் பஞ்சத்தை நோக்கி நகரும் இலங்கை?

இலங்கை அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் அடுத்த வருடம் இலங்கை மிகமோசமான உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கும் நிலையேற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல (J.C. Alawathuwala) தெரிவித்துள்ளார்.

இரசாயன உரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட எந்தவித விஞ்ஞானபூர்வ அடிப்படைகளுமற்ற தீர்மானத்தின் விளைவாக விவசாயிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பயிர்ச்செய்கை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-1280248759766322&output=html&h=430&slotname=7453716325&adk=424701043&adf=639033484&pi=t.ma~as.7453716325&w=412&lmt=1638017980&rafmt=11&psa=1&format=412×430&url=https%3A%2F%2Fwww.theevakam.com%2Farchives%2F313293&flash=0&fwr=1&wgl=1&dt=1638020011239&bpp=31&bdt=2806&idt=32&shv=r20211111&mjsv=m202111110101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dc47c8d47a405f13d-22ecce9f16cb0085%3AT%3D1629716353%3ART%3D1629716353%3AS%3DALNI_MbqHdEW91RxVWIXBZAFlIEDd65QMw&prev_fmts=0x0%2C403x90%2C300x250&nras=1&correlator=3316430388890&frm=20&pv=1&ga_vid=586267582.1629716354&ga_sid=1638020011&ga_hid=248241807&ga_fc=1&rplot=4&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&dmc=2&adx=0&ady=1481&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=31062937%2C31063792%2C31061690%2C31060475&oid=2&pvsid=3080026948850390&pem=492&tmod=771597762&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&xpc=W5LjBsCLDb&p=https%3A//www.theevakam.com&dtd=79

“இரசாயன உர இறக்குமதிக்கு தடைவிதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட்டு, அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்நாடகத்தின் விளைவாக நாடு வெகுவிரைவில் உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையிலிருக்கின்றது.

இதன் பிரதிபலனை 2022 ஏப்ரல் மாதம் வரவிருக்கும் தமிழ், சிங்களப் புதுவருடப்பிறப்பின் போது நன்கு உணர்ந்துகொள்ளமுடியும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *