இலங்கையின் நண்பனான சீனா தற்போது எதிரியாக மாறிவிட்டது!

துன்ப, துயரங்களில் இலங்கையுடன் இருந்த நண்பனான சீன அரசு தற்போது இலங்கையுடன் கோபித்துக்கொண்டிருப்பதாக ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப் பசளையை ஏற்றிய கப்பம் சுமார் 70 தினங்கள் இலங்கைக்கு அருகில் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கப்பலில் உள்ள பசளை நாட்டுக்குள் அனுமதிக்க தகுந்தது, அதில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இல்லை என தரப்படுத்தல் நிறுவனங்கள் கூறி வரும் நிலையில், தாவரங்களை தனிமைப்படுத்தும் சேவை, அந்த பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இருப்பதாக கூறுகிறது.

இரண்டு அரச நிறுவனங்கள் இந்த பசளை தொடர்பான ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பரிசோதனை அறிக்கைகளை சமர்ப்பிக்கும் போது, சீன அரசாங்கம், அது தொடர்பான தனது அதிருப்தியை இலங்கை அரசாங்கத்திடம் வெளியிட்டுள்ளது எனவும் ஷசீந்திர ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கமத்தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *