பச்சை நிற கண்களால் உலகை தன்பக்கம் திரும்ப வைத்த ஆப்கான் பெண்!

கடந்த 1985ல் பச்சை நிற கண்களால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த ஆப்கான் பெண்மணிக்கு தாலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடு ஒன்று தஞ்சமளித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் போரினால் நாட்டைவிட்டு வெளியேறிய Sharbat Gula பாகிஸ்தான் அகதிகள் முகாமில் வசித்து வந்த நாட்களில், தமது பச்சை நிற கண்களால் உலக மக்களை தன் பக்கம் திரும்ப வைத்தார்.

அப்போது அவருக்கு 12 வயது. உலகின் முன்னணி மாதயிதழ்களில் ஒன்றான National Geographic-ல் அவரது முகம் புகைப்படமாக வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.

அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு, 2016ல் போலி அடையாள அட்டைக்காக முயன்றதாக கூறி பாகிஸ்தான் நிர்வாகத்தினரால் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டார்.

தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், விதவையும் நான்கு பிள்ளைகளுக்கு தாயாருமான Gula இத்தாலி நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். குறித்த தகவலை வியாழக்கிழமை இத்தாலிய நிர்வாகமே வெளிப்படுத்தியுள்ளது.

தமது குடும்பத்திற்கு தாலிபான்களால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி Gula உதவி கேட்டதாகவும் இத்தாலி தெரிவித்துள்ளது. மேலும், இத்தாலியில் அவர் பிழைப்புக்கான அனைத்து உதவிகளும் செய்து தரவும் நிர்வாகம் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ல் பாகிஸ்தான் சிறைவாசத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்ட Gula குடும்பத்தை, அப்போதைய ஆப்கான் ஜனாதிபதியான அஷ்ரப் கானியும் மனைவியும் அரவணைத்துக் கொண்டனர்.

ஜனாதிபதி அஷ்ரஃப் கானி புதிய குடியிருப்பு ஒன்றையும் Gula குடும்பத்தினருக்கு கைமாறினார். தற்போது தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டார் Gula. 40 வயது கடந்த Gula தற்போது ஹெபடைடிஸ் சி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *