கணவன் அன்பாக பார்த்துக் கொள்வதால் விவாகரத்துக் கேட்ட மனைவி!

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் காலம் முதல் சொல்வதுண்டு.

திருமண வாழ்க்கை சரியாக அமையாமல் பலர் விவாகரத்து வேண்டி கோர்ட் படி ஏறிக் கொண்டிருக்கும் காலம் இது.

ஆனால் இங்கே ஒரு பெண் தன் கணவர் தன்னை அன்பாகப் பார்த்துக் கொள்வதாக கோபப்பட்டு விவாகரத்து கேட்டுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தின் சாம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்குத் திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் திடீரென டை.வ.ர்ஸ் கேட்டு கோர்ட்டில் மனு செய்தார்.

அந்த மனுவை வாசித்துப்பார்த்த நீதிபதிக்கு ஒருநிமிடம் வியர்த்துவிட்டது.

காரணம், இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்துள்ளது என்னும் பராசக்தி திரைப்பட வசனத்தைப் போல அதில் இருந்த வாசகங்கள் இருந்தது.

ஆம், அந்த இளம்பெண் தன் மனுவில், ‘என் கணவர் என் மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைத்திருக்கிறார். நாங்கள் சேர்ந்து வாழ்ந்த ஒன்றரை ஆண்டில் அவர் என்னிடம் ச.ண்.டை போட்டதே இல்லை.

எனக்கு சமையலில் உதவியும் செய்கிறார். நான் தவறு செய்தாலும் பெருந்தன்மையோடு மன்னித்து விடுகிறார்.

இதனால் எனக்கு லைப் செம போர். அவரோடு வாழ விரும்பவில்லை’ என நீண்டது மனு.

கணவர் தரப்போ, ‘நான் என் கடமையை சரியாகச் செய்கிறேன். என் மனைவியோடு சேர்த்து வையுங்கள்’ என சொல்ல நீதிபதிக்கே தலைசுற்றிவிட்டது.

இன்றைய சூழலில் கு.டி.த்.துவிட்டு வந்து கணவர் அடிக்கிறார், சந்தேகப்படுகிறார் என்றெல்லாம் பல பெண்கள் அழுதுகொண்டே நீதிமன்றம் வருகிறார்கள்.

ஆனால் இப்படியும் ஒரு வழக்கா? என யோசித்த நீதிமன்றம், கடைசியில் தம்பதியினர் பரஸ்பரம் மனம் விட்டு பேசுமாறு சொல்லி வ.ழக்கை வேறு திகதிக்கு ஒத்திவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *