வெள்ளத்தில் மூழ்கிய கிராமம் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே தெரிந்த அதிசயம்!

ஸ்பெயின் நாட்டில் பெருவெள்ளத்தால் மொத்தமாக மூழ்கிய கிராமம் ஒன்று 30 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே தெரியவந்துள்ளது.

ஸ்பெயினில் Aceredo என்ற கிராமம் 1992ல் மொத்தமாக மூழ்கியது. போர்த்துகீசிய நீர்மின் நிலையம் ஒன்று அதன் வெள்ளம் வெளியேறும் கதவுகளை மூடியதால் லிமியா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுவட்டார கிராமம் முழுவதும் நீரால் சூழ்ந்தது. அதில் Aceredo என்ற கிராமம் மொத்தமாக நீருக்கடியில் மறைந்தது. இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் நீர்மட்டம் குறைய Aceredo கிராமத்தின் சேதமடைந்த மிச்சங்கள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

கற்களால் கட்டப்பட்ட சுமார் 70 வீடுகள் மட்டுமே சேதமடைந்திருந்தாலும் இன்னமும் இடிந்து போகாமல் உள்ளது. சுமார் 30 ஆண்டுகள் தண்ணீருக்குள் மூழ்கியிருந்தாலும், பல வீடுகளின் கூரைகள் இன்னமும் மொத்தமாக சேதமடையவில்லை என்றே தெரியவந்துள்ளது.

சுமார் 120 பேர்கள் வசித்துவந்த இந்த கிராமத்தில் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அப்பகுதியில் நீர்த்தேக்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது நீர்மட்டம் குறைந்திருந்தாலும், குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியே காணப்படுகிறது. மட்டுமின்றி, கிராம மக்கள் பயன்படுத்திய வாகனங்கள் தனிப்பட்ட பொருட்கள் அனைத்தும் அங்கேயே விட்டுச் செல்லப்பட்டுள்ளதும் காண முடிகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *