Prime Lands Residencies PLC பணிப்பாளர் சபைக்கு நொயெல் ஜோசப் தெரிவு!

முன்னணி காணி கட்டட விற்பனை நிறுவனமான Prime Lands Residencies PLCஆல் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்காக நொயெல் ஜோசப் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு சுயாதீன பணிப்பாளராக செயற்படுகிறார்.

திரு. ஜோசப் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பொறியியல் மற்றும் பொறியியல் ஆலோசனைத் துறையில் 32 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள உயர் தகுதியும் மரியாதையும் கொண்ட பொறியியலாளர் மற்றும் ஆலோசகர் ஆவார். பொறியியல் துறையில் மூன்று தசாப்த கால அனுபவத்துடன், அவர் இலங்கையில் இயங்கும் முன்னணி பொறியியல் ஆலோசனை நிறுவனமான NJ Consultants ஆரம்பித்து பராமரித்து வருகிறார், மேலும் இப்போது 200 பெரிய அளவிலான பொறியியல் திட்டங்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்க முடிந்துள்ளது.
அவரது நிபுணத்துவம் மற்றும் தலைமையின் கீழ், NJ Consultants நிறுவனம் விருந்தோம்பல் மற்றும் தொழில்துறை மேம்பாட்டுத் துறைகளில் ஏராளமான திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன், Ritz Carlton – Maldives, Cheval Blanc Randheli – Maldives, Altex EPZ – Kenya, EAM Maliban Textile project – Jordan மற்றும் Soorty Textiles – Bangladesh ” LT Karle India இதில் அடங்கும். நொயெல் ஜோசப் NJ Consultants மற்றும் CAD Team போன்ற நிறுவனங்களில் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அவரது விரிவான பணியின் போது அவர் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில், டெவலப்மென்ட் கன்சல்டிங் லங்கா பிரைவேட் லிமிடெட், சவுதி அரேபியாவில் Safari Company LTD மற்றும் பிரித்தானியாவின் Baharudden P.M.S. Associates போன்ற நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

திரு. ஜோசப் அமெரிக்காவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் (MIEEE), இன்ஸ்டிடியூட் ஆஃப் லைட்டிங் இன்ஜினியரிங் (MILE) UK, Illumination Engineering Society (MIES) USA, Incorporated Engineer (Eng& UK, The Institute of Engineering Technology ^MIET& UK இன் உறுப்பினராவார். The Institute of American Society of Heating” Refrigerating and Air-conditioning Engineers ^MASHRA&’ அவர் தற்போது Regnis (Lanka) PLC, Singer Industries (Ceylon) PLC, On’Ally Holdings PLC இன் பணிப்பாளர் சபையில் பணியாற்றுகிறார்.

பிரைம் குழுமம் தொடர்பில்
26 வருட காலமாக நம்பிகையை வென்ற காணி கட்டட விற்பனைத் துறையில் தலைமை தாங்கும் பிரைம் வர்த்தக குழுமம் தற்போது நாடு முழுவதிலும் 4000க்கும் அதிகமான காணி வேலைத்திட்டங்களையும் 25க்கும் அதிகமான தனி வீட்டு வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டுள்ளதுடன் 42 Condominium வீட்டு வேலைத்திட்டங்களில் 35 வேலைத்திட்டங்கள் முழுமையாக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சேவை செய்யக் கூடிய சிறந்த 25 நிறுவனங்கள் பட்டியலில் 5 தடவைகள் தெரிவு செய்யப்பட்ட பிரைம் குழுமம் முழுமையான இலங்கை வர்த்தக நிறுவனம் என்பதுடன் LMD சஞ்சிகையினால் 2019 ஆண்டில் நாட்டின் வர்த்தகங்கள் மத்தியில் கௌரவமான வர்த்தக நாமங்கள் அடங்கிய நிறுவனங்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. அத்துடன் பிரைம் குழுமத்தின் தலைவர் மற்றும் அதன் தலைவி ஆகியோரை LMD சஞ்சிகையினால் 2019ஆம் ஆண்டில் நாட்டின் சிறந்த 100 வர்த்தகங்களைச் சேர்ந்த ‘Realty Visionary’ and ‘Power Woman’இனால் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், பிரபலமான PropertyGuru Asia Property Awards விருதுவழங்கும் நிகழ்வில் ‘Best Developer’ மற்றும் ‘Best Luxury Condo Development’ என்ற விருதுகளையும் வெல்வதற்கு பிரைம் குழுமத்திற்கு முடிந்தது.

Asia One சஞ்சிகையினால் கௌரவிக்கப்படும் ஆசியாவின் விசேட இலச்சினைகளுக்குள் இடம்பிடித்துள்ளதுடன் 2018ஆம் ஆண்டு இலங்கைகயில் சிறந்த தொழில்முனைவோர் என்ற அந்தஸ்தையும் பிரைம் குழுமம் பெற்றமை குறிப்பிடதத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *