கிம் ஜாங் உன்னின் மனைவி பற்றிய முக்கிய ரகசியம் வெளியானது!

உலக நாடுகளே உற்றுநோக்கும் வடகொரியாவின் சர்வாதிகார ஜனாதிபதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கிம் ஜாங் உன்.

கடும் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறார், அந்நாட்டு மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விதிவிலக்கல்ல கிம் ஜாங் உன்னின் மனைவியான Ri Sol-ju, சொந்த குடும்ப உறுப்பினர்களை சந்திக்க கூடாது, பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளதாம்.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு,

மூன்று குழந்தைகளுக்கு தாயான Ri Sol-ju- சிறந்த பாடகியாவார், திருமணத்திற்கு முன்பு சியர் லீடராகவும் இருந்திருக்கிறாராம்.

* கிம் ஜாங் உன்னின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போக, தன்னுடைய அடுத்த வாரிசாக கிம் ஜாங் உன்னை அறிவித்தார், உடனடியாகவே Ri Sol-ju கிம் ஜாங் உன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டாராம், தன்னுடைய ஜனாதிபதியின் உத்தரவை மீறமுடியாமலேயே Ri Sol-ju கிம் ஜாங் உன்னை திருமணம் செய்து கொண்டாராம்.

* திருமணம் ஆன உடனேயே பெண்களின் பெயரில் மாற்றம் இருக்கும், ஆனால்  Ri Sol-ju விடயத்தில் முற்றிலுமாக பெயரை மாற்றச் சொல்லி இருக்கிறார்கள், இன்று வரை அவரது குடும்ப பெயர், உண்மையான பெயர் குறித்த தகவல்கள் மர்மமாகவே இருக்கின்றன.

* நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த வளர்ந்த கிம் ஜாங் உன்னின் மனைவி, திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை சந்திக்ககூடாது என்பது கடுமையான உத்தரவாம்.

* பொது வெளியில் அவர் செல்லும் போது, அவருக்கு பிடித்தமான உடைகள் மற்றும் சிகை அலங்காரம் செய்து கொள்ளக்கூடாதாம், குறிப்பாக முதல் குழந்தை பிறந்ததில் இருந்து, ஒரே மாதிரியான சிகை அலங்காரம் மட்டும் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறாராம்.

* பொது இடங்களில்  Ri Sol-ju-வை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று, தன்னுடைய கணவருடன் மட்டுமே  Ri Sol-ju-ன் தென்படுவார், இதேபோன்று இன்று வரை கிம் ஜாங் உன்னின் குழந்தைகள் யார் என்பது மர்மமாகவே இருக்கிறது, இன்டர்நெட்டில் தேடினால் கூட ஒரு புகைப்படத்தை கூட காண்பது அரிதான ஒன்றாகும்.

* வடகொரியாவை விட்டு வேறு நாடுகளுக்கோ, நகரங்களுக்கோ சொல்ல  Ri Sol-ju க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம், திருமணத்திற்கு முன்பாக சீனா, தென் கொரியா நாடுகளுக்கு  Ri Sol-ju பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* தன்னுடைய கர்ப்பம் குறித்த தகவல்களையும்  Ri Sol-ju-ன் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டுமாம், முதலில் இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்த போதும், ஆண் குழந்தை வேண்டும் என  Ri Sol-ju-ன் மீது அதிகளவு அழுத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *