பரீட்சை எழுதிய மணப்பெண் மண்டபத்தில் காத்திருந்த மணமகன்!

திருமணமும், செமஸ்டர் தேர்வும் ஒரே நேரத்தில் வந்ததால் மனகோலத்தில் சென்று மணபெண் தேர்வு எழுதியது இணையவாசிகளை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார். 

திருமண நாட்கள் என்றாலே இரு குடும்பத்தினரும் மிகவும் பிஸியாக இருப்பார்கள், அதிலும் குறிப்பாக மணப்பெண்களுக்கு, காலை முதல் இரவு வரை பல சடங்குகள் நடத்தப்படும், இதற்காக அவர்கள்  திருமண உடை மற்றும் மேக்கப்பில் போட்டு தயாராவதற்கே நேரம் சரியாக இருக்கும். 

ஆனால் இப்படிப்பட்ட சூழலில் இதற்கு மாறுப்பட்டு  குஜராத்தில் ஒரு மாணவி திருமண உடையில் வந்து செமஸ்டர் தேர்வு எழுதியது இணையத்தில் பரவி வருகிறது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஷிவாங்கி பக்தாரியா. இவர் ராஜ்கோட்டில் உள்ள சாந்தி நிகிதன் கல்லூரியில் இளநிலை சமூகப்பணி பட்டபடிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில்,கடந்த சில மாதங்களுக்கு முன் ஷிவாங்கிக்கும் பார்த் படாலியா என்பவருக்கும் நேற்று (நவ.24) இருவீட்டார் சமதத்துடன்  திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது. ஆனால், இதேநாளில் (நவ.24) ஷிவாங்கி பயின்று வரும் இளநிலை சமூகப்பணி பட்டபடிப்பின் செமஸ்டர் தேர்வு என அறிவிக்கப்பட்டது. 

திருமணமும், செமஸ்டர் தேர்வும் ஒரேநாளில் வந்ததால் ஷிவாங்கி மிகவும் குழப்பம் அடைந்தார்.பின்னர் செமஸ்டர் தேர்வை எழுத வேண்டும் என்ற முடிவில் ஷிவாங்கி உறுதியாக இருந்தார். இது குறித்து இரு குடும்பத்தினரிடமும்  ஷிவாங்கி தனது நிலைமையை எடுத்துக்கூறினார்.

இதனை புரிந்து கொண்ட இரு வீட்டார் மற்றும் ஷிவாங்கி வருங்கால கணவரும் செமஸ்டர் தேர்வு எழுதிய பின்னர், சில மணி நேரம் கழித்து திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என தெரிவித்தினர். 

 திருமணமும் அதேநாளில் நடைபெறுவதால் ஷிவாங்கி தனது செமஸ்டர் தேர்வை எழுத மணப்பெண் கோலத்தில் தேர்வு மையத்திற்கு வந்தார். அவர் மணக்கோலத்தில் தேர்வு அறைக்கு சென்று செமஸ்டர் தேர்வை எழுதினார். பின்னர் ஷிவாங்கிக்கும், பார்த் படாலியாவுக்கும் திருமணம் நடைபெற்றது.    

இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், பாராட்டுகளையும் பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *