பண்டிகை காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் GMOA எச்சரிக்கை!

தற்போதைய நிலை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தத் தவறினால் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொவிட்-19 தொற்று பரவல் அதிகரிக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

எதிர்காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறுவது தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகளை வகுப்பது முக்கியம் என அச்சங்கத்தின் உறுப்பினரான வைத்தியர். பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

சரியான முறையில் கவனம் செலுத்தத் தவறினால், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் ஏற்கனவே அதிகரித்து வரும் தொற்று நோய்களுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்கத் தவறினால் ஆபத்தான விளைவு ஏற்படும் எனவும், எனவே பொதுமக்கள் அவதானமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *