கிண்ணியாவில் படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உட்பட 7 பேர் பலி!

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்களுடன் பயணம் செய்த இழுவைப்படகு கவிழ்ந்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்தில் 6 மாணவர்களும் உரு பயணியும் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதலாம் இணைப்பு
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இழுவைப்படகொன்று கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த இழுவைப் படகில் சுமார் 20 மாணவர்கள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பயணம் செய்த மாணவர்களில் ஏழு பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன், காணாமல் போன மாணவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு கிண்ணியா – குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கியுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் எனப் பலர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காப்பற்றப்பட்டவர்கள் நோயாளர் காவு வண்டி மூலமாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுள்ளனர். மேலும் இவ்விபத்தில் பலர் உயிரிழந்திருக்ககூடும் என அச்சம் வெளியிடப்படுகிறது.

எனினும், சரியான மரண விபரம் இன்னும் தெரியவராத நிலையில் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *