மரண நேரத்தில் பெற்றோர் தேவர்களை பார்க்கும் நோயாளிகள் ஒரு செவிலியரின் அனுபவம்!

பொதுவாக மரணத்துக்கு பயப்படாதவர்கள் குறைவு என்று கூறலாம். அதிலும் மரணம் வலியைக் கொடுக்கக்கூடியது என்ற எண்ணமும் பலருக்கு உண்டு.

ஆனால், மரணம் வலியைக் கொடுக்கக்கூடியது அல்ல என்பதை தான் தனது அனுபவத்தில் பார்த்துள்ளதாக தெரிவிக்கிறார் தீவிர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவரான அமெரிக்க செவிலியர் ஒருவர்.

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த செவிலியரான Julie McFadden, நோயாளிகள் மரணமடையும் நேரத்தில் என்ன பேசுவார்கள் என்பது குறித்து தான் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தனது நோயாளிகள் மரணமடையும் நேரத்தில், இறந்துபோன தங்கள் அன்பிற்குரியவர்களைப் பார்ப்பதாக தன்னிடம் கூறுவதுண்டு என்கிறார். அவர்கள் இவர்களிடம், கவலைப்படாதே, நாங்கள் உனக்கு உதவி செய்கிறோம், நாங்கள் வந்து உன்னை அழைத்துச் செல்வோம் என்றெல்லாம் சொல்வதாக நோயாளிகள் கூறுவதுண்டாம்.

ஒருவேளை அவர்கள் மயக்க நிலையில் அப்படி யாரோ இருப்பதாக கற்பனை செய்துகொள்வதுண்டோ என Julieயிடம் கேட்டால், அப்படியில்லை என்கிறார். காரணம், அந்த நோயாளிகள் Julieயிடம் நான் பார்ப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா என்று கேட்டதுண்டாம்.

அவர்கள் இறப்பதற்கு ஒரு மாதம் அல்லது அதற்கு முன்பு, இறந்துபோன தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தேவதூதர்களைக் கூட பார்ப்பதுண்டாம்.

பெரும்பாலும் நோயாளிகள் இறப்பதற்கு முன், அம்மா, அல்லது அப்பா, ஐ லவ் யூ என்று சொல்வதை தான் பெரும்பாலும் பார்த்துள்ளதாக தெரிவிக்கிறார் Julie.

பொதுவாக மரணம் என்றால் பயம் என கருதப்படும் நிலையில், தான் பார்த்த நோயாளிகள் பயப்படாமல் மிகுந்த அமைதலாக இருப்பதையும் தான் பார்த்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

மரணம் வலியை ஏற்படுத்தக்கூடியது அல்ல என்பதை தான் மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புவதாக தெரிவிக்கிறார் Julie. எப்படி நம் உடல் பிறப்பதற்கு தயங்குவதில்லையோ, அதே போல் மரணத்துக்கும் அது தயாராகவே படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

Julieயை 430,000 பேர் பின்தொடர்கிறார்கள். அவரது வீடியோ 3.6 மில்லியன் லைக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *