பெண்கள் அணியும் கொலுசின் பின்னால் உள்ள ‌ரகசியம்!

பெண்கள் நகை அணிவது என்பது பாரம்பரியமாகவே முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. தங்களின் வசதிக்கேற்ப தங்கள், வெள்ளி, பிளாட்டினம் என நகைகளை அணிந்து வருகின்றனர்.

இதில் வெள்ளி நகை அணிவதால் உடலில் உள்ள முக்கிய வர்மப்புள்ளிகளைத் தூண்டிவிடப்பட்டு ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்க உதவுகின்றது.

குளிர்ச்சி தருணம் உலோகமான வெள்ளிக்கு இந்தியாவில் தனி மதிப்பு உண்டு. மற்ற நகைகளை அணிந்தால் சில தருணங்களில் ஒவ்வாமை ஏற்படுகின்றது. ஆனால் வெள்ளி நகைகள் அணிந்தால் அவ்வாறு எந்த ஒவ்வாமையும் ஏற்படாமல் இருப்பதோடு, ஆயுள் விருத்தியாகும் என்றும் ஆயுர்வேதம் கூறுகின்றது.

பழங்காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான அணிகலன்களை அணிந்து வந்தனர். இன்றும் சில மலைவாழ் மக்கள் இவ்வாறு அணிந்து வருகின்றனர். ஆனால் சமீப காலங்களில் நாகரீகத்திற்கு ஏற்ப பெண்கள் அணிந்து வருகின்றனர்.

தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.

சிறுவயது குழந்தைகளின் அசைவினை கண்காணிக்கவும், குழந்தை நடக்கும் போது சங்கீதம் கேட்க வேண்டும் என்று கொலுசு அணிந்து விடுகிறோம்.

வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி ஆரோக்கியமளிக்கிறது. பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படும்.

இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம். இதற்காக தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கொலுசு அணிவிக்கப்படுகிறது.

உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *