அடுத்த வருடம் முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு அனுமதி!

சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் “அனைவருக்கும் திருமணம்” (Marriage for All) என்ற முயற்சிக்கு வாக்காளர்கள் ஒப்புதல் அளித்தனர்.

இந்நிலையில், மேற்கு ஐரோப்பாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய கடைசி நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும்.

இரண்டு கட்ட செயல்முறையில், வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்ட ஒரே பாலின ஜோடிகளுக்கு ஜனவரி தொடக்கத்தில் இருந்து அவர்களின் அந்தஸ்து அங்கீகரிக்கப்படும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும், அதாவது ஜூலை 1, 2022 முதல் தம்பதிகள் திருமணம் செய்து கொள்ள அல்லது தங்கள் பதிவு செய்யப்பட்ட தம்பதியாக (registered partnership) மாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

திருமணத்திற்கான ஆயத்தங்களை இந்தத் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்கலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இந்தத் தேதிக்குப் பிறகு registered partnership அனுமதிக்கப்படாது.

இந்த சட்ட மாற்றம், நடைமுறைக்கு வரும் முதல் வருடத்தில் பல நூறு பேர் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கெடுப்பின் முடிவில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், அது இப்போது சட்டமாக்கப்பட்டுள்ளது என்று “Marriage for All” பிரச்சாரத்தின் இணைத் தலைவர் Maria von Kaenel தெரிவித்தார்.

“நாங்கள் திருமண சமத்துவத்திற்காக 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம், வாக்கெடுப்பு முடிவு ஒரு வரலாற்று தருணம்” என்று அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *