இந்துத்துவம்,இஸ்லாம் குறித்து கருத்து தெரிவித்த சல்மான் குர்ஷித் வீடு மீது தாக்குதல்!

புதிய புத்தகத்தில் ‘இந்துத்துவா’வை தீவிர இஸ்லாத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் நைனிடால் இல்லம் சேதப்படுத்தப்பட்டது. 

இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் சல்மான் குர்ஷித் அவரது வீட்டில் ஏற்பட்ட தீ, எரிந்த கதவுகள் மற்றும் உடைந்த ஜன்னல் கண்ணாடிகள் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இதில் ஒரு வீடியோவில் உள்ள குழுவினர் பாஜக கொடியை அசைத்தபடி நெருப்பைச் சுற்றி நின்று “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்களை எழுப்புவதையும் காட்டுகிறது.

இந்த சம்பவத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ள சல்மான் குர்ஷித் , “இந்த அழைப்பினை விட்டுச் சென்ற எனது நண்பர்களுக்கு இந்த கதவுகளைத் திறப்பேன் என்று நான் நம்புகிறேன். ‘இந்துத்துவா’ குறித்து நான் தவறாகக் கூறுகிறேனா?” என்று தெரிவித்திருக்கிறார்.

சல்மான் குர்ஷித் சமீபத்தில் எழுதிய ‘அயோத்தியின் மீது சூரிய உதயம்- நமது காலத்தில் தேசம்’ – அயோத்தி சர்ச்சையின் பகுப்பாய்வு என்று புத்தகத்தின்  354 பக்கத்தில்,  இந்துத்துவா மற்றும் தீவிர இஸ்லாம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒற்றுமைகளை விவரித்துள்ளது சர்ச்சைக்குள்ளானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *