உலக கிண்ண T20 போட்டிகளில் அசத்திய வீரர்கள்!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்ற நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங் என அமர்க்களமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் குறித்து பார்ப்போம்.

அதிக ரன் குவித்த துடுப்பாட்ட வீரர்கள்!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 303 ரன்களை குவித்து அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து டேவிட் வார்னர் 289 ரன்கள், முகமது ரிஸ்வான் 281 ரன்கள், ஜாஸ் பட்லர் 269 ரன்கள், அசலங்கா 231 ரன்கள் எடுத்துள்ளனர்.

அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள்!

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா 16 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். ஆடம் சாம்பா 13 விக்கெட்டுகள், போல்ட் 13 விக்கெட்டுகள், ஹேசல்வுட் 11 விக்கெட்டுகள், ஷகிப் அல் ஹசன் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர்.

இந்த தொடரில் அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் பட்லர் 101 ரன்களை குவித்துள்ளார். சிறந்த பேட்டிங் ஆவரேஜும் அவருடையது தான். 89.66 ரன்கள் அவருடைய சராசரி. ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார் ஆடம் சாம்பா. அயர்லாந்து வீரர் ஸ்டெர்லிங் சிறந்த பவுலிங் எக்கானமியை கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தலா 5 போட்டிகளில் இந்த தொடரில் வென்றுள்ளன. பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வெற்றி சதவிகிதம் 83.333.

அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 2022-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *